AK64 கார் ரேஸ் படமா? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்!
AK64 Movie Update: கோலிவுட் சினிமா மற்றும் கார் ரேஸ் போட்டியில் சாதனைப்படைத்து வருபவர் அஜித் குமார். இவரின் நடிப்பில் குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து, AK64 திரைப்படமானது உருவாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியான ஆதிக் ரவிச்சந்திரன், இப்படம் குறித்து ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
தென்னிந்தியா சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவர் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவரும் நிலையில், தொடர்ந்து திரைப்படங்களில் கதாநாயகனாகவே நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படமானது 2025 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் அஜித் குமார் மற்றும் திரிஷா கிருஷ்ணன் இணைந்து நடித்திருந்தனர். இந்த 2025ம் ஆண்டில் அஜித் குமாரின் விடாமுயற்சி (Vidaamuyarchi) மற்றும் குட் பேட் அக்லி என இரு திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் குட் பேட் அக்லி மாதம் சுமார் ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இதை தொடர்ந்து முழுவதுமாக கார் ரேஸ் போட்டியில் இவர் களமிறங்கிவிட்டார். கார் ரேஸை தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கத்தில் AK64 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், பின் அஜித் குமார் இன்னும் கார் ரேஸ் போட்டியில் தொடர்ந்து வருகிறது.
அதன் காரணமாக வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரியில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளது. சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்றுவந்த கார் ரேஸ் நிகழ்ச்சியில் ஆதிக் ரவிசந்திரன் பார்வையாளராக கலந்துகொண்டிருந்தார். அதில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதிக் ரவிச்சந்திரன், AK64 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.




இதையும் படிங்க: விமல் நடிப்பில் வடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சசிகுமார்
AK64 திரைப்படம் குறித்த அப்டேட் கொடுத்துள்ள ஆதிக் ரவிச்சந்திரன்:
மலேசியா கார் ரேஸ் நிகழ்ச்சியின் கலந்துகொண்ட ஆதிக் ரவிச்சந்திரன், செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். அதில் செய்தியாளர் ஆதிக் ரவிச்சந்திரனிடம், AK64 படமானது கார் ரேஸ் படமா? என கேள்வி கேட்டிருந்தார். அதில் அவர், “Ak64 படம் ஒரு பொழுதுபோக்கு சார்ந்த படமாக இருக்கும்.
இதையும் படிங்க: சிலம்பரசன் என்ற பெயர் STR-னு மாற காரணம் இதுதான்.. கலகலப்பாக பகிர்ந்த சிலம்பரசன்!
கதைவாரியாக பார்த்தாலும் நல்ல ஒரு படமாக இருக்கும். இந்த படமும் குட் ப அக்லி படம் போல, ஒரு வித்தியாசமான கதையில் படம் கொடுக்கவேண்டும் என்பதுதான் எனது ஆசை. கதாபாத்திரங்கள் வரையாகவும், கதை வாரியாரியாகவும் நல்லபடியாக வந்துகொண்டிருக்கிறது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும்” என அவர் தெரிவித்திருந்தார்.
Ak64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசிய வீடியோ :
#AK64 Update from Adhik..🔥🌟
“It’ll be a Screenplay based Entertainer..🌟 This film will be a complete contrast to #GoodBadUgly ..🤝 Character wise, Screenplay wise, it is shaping up well..👌 We are aiming to start the shoot from Feb..✌️”pic.twitter.com/7C7GQtaKme
— Laxmi Kanth (@iammoviebuff007) December 14, 2025
இந்த படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் நடிகைகள் ஸ்வாசிகா மற்றும் ரெஜினா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணையவுள்ளனர் என கூறப்படுகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.