Jana Nayagan: ஜன நாயகன் படத்தின் வெளிநாடு ப்ரீ-புக்கிங் நிறுத்தம்.. ரிலீஸ் தேதி தள்ளிபோகிறதா?
Thalapathy Vijays Jana Nayagan: கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர்தான் தளபதி விஜய். இவரின் நடிப்பில் கடைசி திரைப்படமாக உருவாகியிருப்பது ஜன நாயகன். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் வெளிநாட்டு ப்ரீ- புக்கிங் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) கடைசி திரைப்படமாக உருவாகிவருவது ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஷூட்டிங் பூஜைகளுடம் தொடங்கியிருந்தது. இந்த படத்தை தமிழ் பிரபல இயக்குநரான ஹெச்.வினோத் (H. Vinoth), கன்னட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துவந்தது. இந்த படமானது ஆரம்பத்தில் தளபதி 69 (Thalapathy 69) என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2025 ஜனவரி 26ம் தேதியில் குடியரசு தினத்தன்று வெளியாகியிருந்தது. அதை தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுவந்தது. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) இணைந்து நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் மமிதா பைஜூ, பாபி தியோல், நரேன், பிரியாமணி மற்றும் வரலட்சுமி சரத்குமார் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் வெளிநாட்டு ப்ரீ-புக்கிங் சமீபத்தில் தொடங்கிய நிலையில், தற்போது அதெல்லாம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோகிறதா? என ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




இதையும் படிங்க: விமல் நடிப்பில் வடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சசிகுமார்
ஜன நாயகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோகிறதா?
நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக ஜன நாயகன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் இந்தியாவில் மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் 2025ம் டிசம்பர் 27ம் தேதியில் மலேசியாவில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சூர்யா 46 படம்… ரிலீஸ் எப்போது தெரியுமா?
இந்நிலையில் இந்த படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ள நிலையில், தற்போது இது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகிறது. தற்போது ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் போன்ற இடங்களில் இப்படத்தின் ப்ரீ-புக்கிங் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜன நாயகன் படம் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு :
All overseas distributors for #JanaNayagan have been told to hold off on opening ticket sales. Despite this, a few smaller markets like Germany and Sweden have already started bookings, while major territories remain on standby.
With the film scheduled for release on January 9… pic.twitter.com/ttma4G9Zak
— LetsCinema (@letscinema) December 13, 2025
இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு தொடர்பாக இன்னும் படக்குழு எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் இந்த படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் முதல் பாடலை தவிர வேறு எந்த அப்டேட்டுகளும் வெளியாகவில்லை. இதனால் இந்த ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு தொடர்பாக தகவல் உண்மையா? என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.