Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விறுவிறுப்பான கதைக்களத்துடன் வெளியான குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸ்… விமர்சனம் இதோ

Kuttram Purindhavan The Guilty One: ஓடிடியில் தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதே போல ஓடிடியில் நேரடியாக தொடர்ந்து இணையதள தொடர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் சோனி லிவ் ஓடிடியில் வெளியான குற்றம் புரிந்தவன் தொடரின் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

விறுவிறுப்பான கதைக்களத்துடன் வெளியான குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸ்… விமர்சனம் இதோ
குற்றம் புரிந்தவன் Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Dec 2025 23:04 PM IST

இந்திய சினிமாவில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் தொடர்ந்து அந்தப் படங்கள் ஓடிடியில் வெளியாகி அனைத்து மொழி ரசிகர்களிடையேயும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி ஓடிடியின் கலாச்சாரம் மக்களிடையே அதிகரித்தப் பிறகு சிறந்த படங்கள் எந்த மொழிகளில் வெளியாகி இருந்தாலும் அதனை ரசிகர்கள் கொண்டாட தவறியதில்லை. இந்த நிலையில் படங்கள் மட்டும் இன்றி தற்போது ஓடிடியில் தொடர்ந்து நேரடியாக இணையதள தொடர்களும் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி அனைத்து ஜானர்களிலும் தொடர்ந்து இணையதள தொடர்கள் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் சமீப காலமாக தமிழ் மொழியில் பல இணையதள தொடர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சோனி லிவ் ஓடிடியில் வெளியாகி உள்ள இணையதள தொடர் குற்றம் புரிந்தவன். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இந்த தொடரில் நடிகர்கள் பசுபதி, விதார்த், லிசி ஆண்டனி, லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மூணார் ரமேஷ், அஜித் கோஷி என பலர் இந்த இணையதள தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்த இணையதள தொடரை இயக்குநர் செல்வமணி முனியப்பன் எழுதி இயக்கி இருந்தார்.

குற்றம் புரிந்தவன் இணையதள தொடர் எப்படி இருக்கு?

முன்னாள் அரசு மருந்தாளுநரான பசுபதி தனது மனைவி லிசி ஆண்டனி மற்றும் பேரன் உடன் வாழ்ந்து வருகிறார். இவரது மகள் பிரவசத்தில் உயிரிழந்த நிலையில் பேரனை பார்த்துக்கொள்ளும் பொருப்பு இவர்களுக்கு வருகிறது. இந்த நிலையில் இவர்களின் பேரன் உடல் நலக் குறைவால் இருப்பதால் அந்த குழந்தையை காப்பாற்ற பாடுபடுகின்றனர்.

Also Read… முடிவடைந்தது அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் படத்தின் படப்பிடிப்பு… வைரலாகும் போஸ்ட்

இந்த நிலையில் பசுபதி எதிர்பாராத விதமாக தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் பெண் குழந்தை பாலியல் வன்முறை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துவிட அந்தப் பெண் குழந்தையின் தந்தையும் தொடர்ந்து உயிரிழந்து போகிறார். இந்த விசயத்தில் பசுபதி எதிர்பராத விதமாக மாட்டிக்கொள்கிறார். இதில் இருந்து அவர் எப்படி தப்பினார்? உண்மையான குற்றவாளியை காவல்துறை அதிகாரிகள் எப்படி கண்டுபிடித்தனர் என்பதே இந்த இணையதள தொடரின் கதை. இது தற்போது சோனி லிவ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Also Read… பிக்பாஸில் வீட்டுதலையா அமித் பார்கவ் என்ன செய்தார் – அடுக்கடுக்காக புகார்களை வைக்கும் போட்டியாளர்கள்