Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Thaman S: அனிருத்திற்கு தெலுங்கில் சுலபமாக வாய்ப்பு கிடைக்கிறது.. ஆனால் எனக்கு இல்லை- தமன் எஸ்!

Thaman S Blasts Telugu Cinema: தென்னிந்திய சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்துவருபவர் தமன் எஸ். இவர் தொடர்ந்து தெலுங்கில் பிரம்மாண்ட படங்களுக்கு இசையமைத்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், அனிருத்துக்கு தெலுங்கில் கிடைக்கும் வாய்ப்பு மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லாதது குறித்து விமர்சித்துள்ளார்.

Thaman S: அனிருத்திற்கு தெலுங்கில் சுலபமாக வாய்ப்பு கிடைக்கிறது.. ஆனால் எனக்கு இல்லை- தமன் எஸ்!
தமன் எஸ் மற்றும் அனிருத்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 13 Dec 2025 22:46 PM IST

இந்திய சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் தமன் எஸ் (Thaman S). இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் ராம் சரண் (Ram Charan) உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் தமிழில் இறுதியாக தளபதி விஜய்யின் வாரிசு என்ற படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் அதர்வாவின் (Athrvaa) நடிப்பிலும், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் இயக்கத்திலும் உருவாகிவரும் இதயம் முரளி (Idhayam Murali)என்ற படத்திற்கு இசையமைப்பாளராக இசையமைத்துவர்கிறார். மேலும் இப்படத்தில் இவரும் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் அனிருத் (Anirudh) போல, தெலுங்கு சினிமாவில் (Telugu Cinema) உச்ச நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துவருகிறார். இவரின் இசையமைப்பில் உருவான படங்களில் பவன் கல்யாண் (Pawan Kalyan) முதல் ராம் சரண் போன்ற பல பிரபலங்களும் நடித்துள்ளனர். மேலும் இவரின் இசையமைப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்டுவரும் படம்தான் அகண்டா தாண்டவா 2 (Akanda Thandava 2).

நடிகர் பாலா கிருஷ்ணா நடிப்பில் இப்படம் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதியில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் இன்றில் பேசிய இவர், தெலுங்கில் இசையமைப்பாளர் அனிருத்துக்கு கிடைக்கும் வாய்ப்பு பற்றியும், தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லாதது பற்றியும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: படம் வரும்போது இன்னும் பயங்கரமா இருக்கும்.. அரசன் படம் குறித்து கருது தெரிவித்த அனிருத்!

தெலுங்கு சினிமா குறித்து இசையமைப்பாளர் தமன் எஸ் சாடிய விஷயம் :

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் தமன், அதில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். மேலும் பேசிய அவர், “தெலுங்கு சினிமாவில் அனிருத்துக்கு பிரம்மாண்ட படங்களில் பணியாற்று வாய்ப்பு ஈசியாக கிடைக்கிறது. ஆனால எனக்கு தமிழில் அதுபோன்ற வாய்ப்பு கிடைப்பதில்லை.

இதையும் படிங்க: விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 46 படம்… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

மேலும் தமிழ் சினிமாவில் அனைவரிடையேயும் நல்ல ஒற்றுமை இருக்கிறது. அது தெலுங்கு சினிமாவில் அந்த ஒற்றுமை இல்லைனு நினைக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவலானது தெலுங்கு சினிமாவில் தீயாக பரவி வருகிறது. மேலும் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை இணையத்தில் தெரிவித்தும் வருகின்றனர்.

அகண்டா 2 படம் குறித்து இசையமைப்பாளர் தமன் எஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

தற்போது இசையமைப்பாளர் தமன் எஸ் , நடிகர் பிரபாஸின் தி ராஜா சாப் என்ற படத்திற்கு இசையமைத்துவருகிறார். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இசையமைப்பில் 2026ம் ஆண்டு வெளியாகும் பிரம்மாண்ட படம் தி ராஜா சாப் என்பது குறிப்பிடத்தக்கது.