விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 46 படம்… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ
Suriya 46 Movie: நடிகர் சூர்யா தற்போது மூன்று படங்களில் அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் தொடர்ந்து உருவாகி வரும் படங்கள் குறித்த அப்டேட்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி வருவதை விட சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கசிந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்தியா முழுவதும் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படங்கள் தமிழ் மொழியில் உருவாகி இருந்தாலும் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் உள்ள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்களும் நடிகர் சூர்யாவின் நடிப்பை வியந்து பேசி வருகின்றனர். மேலும் தங்களுக்கு ரோல் மாடலாகவும் நடிகர் சூர்யாவை குறிப்பிட்டு பிரபலங்கள் பலர் பேட்டிகளில் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் நடிகர் சூர்யா சமீபத்தில் பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் உடன் இணைந்து தனது 47-வது படத்திற்காக இணைந்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. மேலும் இந்தப் படத்தை நடிகர் சூர்யா புதிதாக தொடங்கிய ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்து வருகிறது. மேலும் இந்தப் படத்தில் மலையாள சினிமாவில் உள்ள பிரபல நடிகர்களும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




இணையத்தில் கவனம் பெறும் சூர்யா 46 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ:
இந்த நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக கருப்பு படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் உருவாகி வரும் 46-வது படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் டைட்டில் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் தற்போது ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Also Read… மெய்யழகன் படத்திற்காக பிரேம் குமார் தமிழ் ரசிகர்கள் மீது கோபமாக இல்லை – நடிகர் கார்த்தி
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Suriya46 pic.twitter.com/kNJx1p01jq
— Swashbuckling (@Swash_Tweets) December 12, 2025
Also Read… வசூலில் பட்டையை கிளப்பும் தேரே இஸ்க் மெய்ன் படம்… கொண்டாட்டத்தில் படக்குழு