Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இன்று மாலை வெளியாகிறது பராசக்தி படத்திலிருந்து 3-வது சிங்கிள்

Parasakthi Movie Third Single: தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்கள் அதிகம் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் பராசக்தி. இந்தப் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் இன்று மூன்றாவது சிங்கிள் வெளியாக உள்ளது.

இன்று மாலை வெளியாகிறது பராசக்தி படத்திலிருந்து 3-வது சிங்கிள்
பராசக்திImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Dec 2025 11:45 AM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த 2025-ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் மதராஸி. படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து திரையரங்குகளில் வெளியாக தாமதம் ஆனது. அதற்கு காரணம் மதராஸி படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தி சினிமாவில் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்து படம் வெளியான பிறகே முழு நேரமாக மதராஸி படத்தில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து படத்தின் பணிகள் முடிவடைந்த பிறகு படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் பராசக்தி. இந்தப் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி இருந்தார். இவர் முன்னதாக இயக்கிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்த பராசக்தி படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் இன்று மாலை ரசிகர்களுக்கு விருந்தாக ஒரு பாடல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை வெளியாகிறது பராசக்தி படத்திலிருந்து 3-வது சிங்கிள்:

இந்தப் பராசக்தி படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ள நிலையில் படத்தில் இருந்து முன்னதாக இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. அந்த இரண்டு பாடல்களும் மெலடி வெர்ஷனில் இருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து இன்று மாலை மூன்றாவது சிங்கிள் வெளியாக உள்ளது. இது ஒரு ஃபாஸ்ட் பீட் நம்பராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படம் வருகின்ற ஜனவரி மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 46 படம்… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

பராசக்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸில் பார்வதி மற்றும் கம்ருதினை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி – வைரலாகு வீடியோ