Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிக்பாஸில் பார்வதி மற்றும் கம்ருதினை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி – வைரலாகு வீடியோ

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 10 வாரத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வார இறுதியில் வந்த விஜய் சேதுபதி இந்த வாரம் முழுவதும் வீட்டில் நடந்த அனைத்து விசயங்களையும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

பிக்பாஸில் பார்வதி மற்றும் கம்ருதினை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி – வைரலாகு வீடியோ
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 13 Dec 2025 17:04 PM IST

தமிழ் சின்னத்திரையில் கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு பிரமாண்டமாக தொடங்கியது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி கடந்த இரண்டு ஆண்டுகளாக தொகுப்பாளராக இருந்து வருகின்றார். இவர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வந்த பிறகு நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கமல் ஹாசன் தொகுத்து வழங்கியதற்கும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதற்கும் நிறைய மாற்றங்கள் உள்ளது என்றே சொல்லலாம். அதன்படி விஜய் சேதுபதி போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை நேரடியாக மூச்சியில் அடித்தது போல கூறி வருகிறார். மேலும் மக்களின் கேள்விகளை எந்த மாற்றமும் இன்றி போட்டியாளர்களிடையே நேரடியாக கேட்டு வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இது ரசிகர்களுக்கு பிடித்ததாகவே உள்ளது.

இந்த நிலையில் 10-வது வாரத்தில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு வழக்காடு மன்றம் டாஸ்க் வழங்கப்பட்டது. சில வழக்குகள் காமெடியாகவும், சில வழக்குகள் மிகவும் சீரியசான டாப்பிக்கையும் பேசியுள்ளனர். அதில் போட்டியாளர்கள் இடையே பல சண்டைகள் ஏற்பட்டுக்கொண்டேதான் இருந்தது. இதற்கு இடையே பார்வதி மற்றும் கம்ருதின் இருவரும் ரூல்ஸ்களை ஃபாலோ செய்வதிலும் பல வேலைகளை செய்தது பிக்பாஸ் வீட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

பிக்பாஸில் பார்வதி, கம்ருதினை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி:

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே பிக்பாஸ் வீட்டில் சில பர்ஷ்னலான விசயங்களை பேசுவதற்கக மைக்குகளை கழட்டியும் மைக்கை மறைத்தும் பார்வதி மற்றும் கம்ருதின் இருவரும் பல முறை பேசியுள்ளனர். இதன் காரணமாக பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் தண்டனை வழங்கினார்.

இந்த நிலையில் இன்று 10-வது வார இறுதியில் பிக்பாஸ் போட்டியாளர்களை சந்தித்து நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ளார். அதில் கம்ருதின் மற்றும் பார்வதியை நேரடியாகவே விமர்சித்து பேசும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… Lockdown: அனுபமா பரமேஸ்வரனுக்கு வந்த சோதனை.. மீண்டும் தள்ளிப்போகும் லாக்டவுன் படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Vaa Vaathiyaar: வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோகிறதா? சோகத்தில் கார்த்தி ரசிகர்கள்!