Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Parasakthi: ‘ஹே நமக்கான காலம்’… பராசக்தி படத்திலிருந்து வெளியானது 3வது பாடல்!

Namakkana Kaalam Song: கோலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் ஹீரோக்களில் ஒருவர்தான் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் 25வது திரைப்படமாக உருவாகியுள்ளது பராசக்தி. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில் திர்ஹபோது இப்படத்தின் 3வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Parasakthi: ‘ஹே நமக்கான காலம்’… பராசக்தி படத்திலிருந்து வெளியானது 3வது பாடல்!
பராசக்தி திரைப்பட பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 14 Dec 2025 18:42 PM IST

இயக்குநர் சுதா கொங்கராவின் (Sudha Kongara) இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) கதாநாயகனாக நடிக்க, நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) நாயகியாக நடித்துள்ளார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் பூஜைகளுடன் தொடங்கியிருந்தது. இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) நடித்துள்ளார். மேலும் இதில் நடிகர்கள் அதர்வா (Athrvaa), ராணா, பேசில் ஜோசப் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது இந்தி திணிப்பிற்கு எதிரான கதைக்களத்தில் தயாராகியுள்ளதாம். இப்படத்தை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் டான் பிக்ச்சர்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் குமார் (GV. Prakash kumar) இப்படத்திற்கு இசையமைப்பாளராக இசையமைத்துள்ளார்.

இந்த படமானது இவரின் இசையமைப்பில் உருவாகியுள்ள 100வது படமாகும். இதிலிருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது கொண்டாடும் விதத்தில் 3வது பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. “நமக்கான காலம்” (Namakkana Kaalam) என்று தொடங்கும் இப்பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகவருகிறது.

இதையும் படிங்க: கேலி செய்தவர்களுக்கு இந்த தீர்ப்பை அர்ப்பணிக்கிறேன்.. தாக்குதல் வழக்கு குறித்து நடிகை வெளியிட்ட பதிவு வைரல்!

பராசக்தி திரைப்படத்தின் 3வது பாடல் குறித்த பதிவை வெளியிட்ட பராசக்தி படக்குழு :

பராசக்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா:

நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படமாக இந்த பராசக்தி வெளியாகவுள்ள நிலையில், முற்றிலும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங், மதுரை, சென்னை மற்றும் இலங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டிருந்தது. இந்த படமானது கடந்த1960ம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக தழுவப்பட்டு உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: ஜன நாயகன் படத்தின் வெளிநாடு ப்ரீ-புக்கிங் நிறுத்தம்.. ரிலீஸ் தேதி தள்ளிபோகிறதா?

இந்நிலையில் சமீபகாலமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகிவந்திருந்தது. இப்படம் ஜன நாயகன் படத்துடன் மோதுவதை தவிர்க்கு சிவகார்த்திகேயன் படக்குழுவிடம் கேட்டதாக வட்டாரங்கள் கூறப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் படக்குழு பராசக்தி படமானது நிச்சயம் 2026 ஆண்டு ஜனவரி 14ம் தேதியில் வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது இந்த தகவலானது போலியானது என்பது உறுதியாகியுள்ளது.