Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

AK64-ல் அஜித் குமார்- ஸ்ரீலீலா ஜோடி உறுதி… வைரலாகும் வீடியோ!

Sreeleela And Ajith Meeting: தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர்தான் அஜித் குமார். இவர் தற்போது கார் ரேஸில் பிசியாக இருந்துவருகிறார். இவரின் அடுத்த திரைப்படமாக AK64 படமானது தயாராகவுள்ள நிலையில், இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிப்பதாக கூறப்பட்டுவந்தது. சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று இதை உறுதிபடுத்தியுள்ளது.

AK64-ல் அஜித் குமார்- ஸ்ரீலீலா ஜோடி உறுதி… வைரலாகும் வீடியோ!
அஜித் குமார்- ஸ்ரீலீலாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 13 Dec 2025 23:20 PM IST

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) மற்றும் அஜித் குமார் (Ajith kumar) கூட்டணியில் இறுதியாக வெளியான படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly) . இந்த படமானது கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தகத்து. இந்த 2025ம் ஆண்டில் அஜித்தின் நடிப்பில் 2 படங்கள் வெளியாகியிருந்த நிலையில், அதில் இந்த குட் பேட் அக்லி படமானது சுமார் ரூ 250 கோடிகள் கிட்ட வசூல் செய்திருந்தது. இதை அடுத்ததாக முழுமையாக அஜித் குமார் கார் ரேஸ் போட்டியில் பங்குபெற்றுவருகிறார். இந்நிலையில் கார் ரேஸை தொடர்ந்து, மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AK64 என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் இந்த படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) நடிக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்து வந்தது. இந்நிலையில் மலேசியாவில் (Malaysia) நடைபெற்றுவரும் கார் ரேஸின்போது, ஸ்ரீலீலா மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இருவரும் அஜித் குமாரை சந்தித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: இது டிசம்பர் மாதமா? இல்ல ஒத்திவைப்பு மாதமா? இந்த மாதத்தில் ஒத்திவைக்கப்பட்ட படங்கள் என்னென்ன தெரியுமா?

அஜித் குமாருடன் நடிகை ஸ்ரீ லீலா செல்பீ எடுக்கும் வீடியோ பதிவு :

இந்நிலையில் மலேசியாவில் அஜித்தின் கார் ரேஸ் போட்டியின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஸ்ரீலீலா, அஜித் குமாருடன் செல்பீ எடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. மேலும் இந்த ரேஸின்போது, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் ஸ்ரீலீலா இணைந்து சுற்றுவது போன்ற வீடியோவும் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: இனிமேல் அவர் நடிக்க மாட்டாரானு ஒரு வருத்தம் இருக்கு… விஜய் குறித்து எமோஷ்னலாக பேசிய அனிருத்

AK64 திரைப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா மற்றும் அஜித் குமார் இணைந்து ஜோடியாக நடிப்பது உறுதியாகியுள்ளது என தெரிகிறது. AK64 படத்திற்காக அஜித் குமார், ஸ்ரீலீலா மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் நடிகை ஸ்ரீலீலா வீடியோ :

அஜித் குமார் தற்போது மலேசியா கார் ரேஸை தொடர்ந்து, ஆசிய லீ மேன்ஸ் போட்டிக்காக தயாராகவுள்ளார். இப்போது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடக்கவுள்ள நிலையில், அதற்கான பயிற்சியில் அஜித் குமார் இணைந்துள்ளார். இந்த ரேஸை முடித்துவிட்ட வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் AK64 படத்தில் அஜித் குமார் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது.