இந்த குழந்தை யாருனு தெரிகிறதா? தமிழில் தளபதி விஜய்யுடன் மட்டும் 2 படத்தில் நடிச்சிருக்காங்க? அட இந்த நடிகைதான்!
Childhood Photo Of Actress: கோலிவுட் சினிமாவில் தமிழ் நடிகைகளை தொடர்ந்து மற்ற மொழி நடிகைகளும் நட்சத்திரமாக நடித்துவருகின்றனர். அந்த வகையில் அவர்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகிவரும், அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.
இந்திய சினிமாவில் பல நடிகைகள் இருக்கின்றனர். குறிப்பாக பாலிவுட் மற்றும் தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு பஞ்சமே இல்லை என்று கூறலாம். மற்ற மொழி நடிகைகள் தமிழ் சினிமாவிலும் நடித்து ரசிகர்களிடையே ஈர்க்கப்பட்டுவருகிறார்கள். அந்த வகையில் மேலே இருக்கும் புகைப்படத்தில் உள்ள சிறுமி மிகவும் பிரபலமான நடிகை. இவர் துளு மொழி பேசும் குடும்பத்தில் பிறந்து, தமிழ் சினிமாவில் அறிமுகமான கதாநாயகிதான் அந்த சிறுமி. இவர் கடந்த 2010ம் ஆண்டில் நடந்த மிஸ் இந்தியா அழகி போட்டியில் கலந்துகொண்டு, இந்த பிரபலம் காரணமாக தமிழில் கதாநாயகியாக (Tamil Cinema) அறிமுகப்படுத்தப்பட்டார். இவருக்கு முதல் படம் தமிழாக இருந்தாலும், அதைத் தொடர்ந்து தெலுங்கு மக்களிடையே இவருக்கு அதிகம் வரவேற்பு கிடைத்திருந்தது. இவர் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு (Allu Arjun) ஜோடியாகவும் படத்தில் இணைந்து நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் தமிழில் தளபதி விஜய்யுடனும் (Thalapathy Vijay) கிட்டத்தட்ட 2 படங்களில் நடித்துள்ளார்.
இவரை முதலில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் மிஷ்கின்தான் (Mysskin). இப்போதாவது இந்த நடிகை யாருனு தெரிகிறதா?. இவர் 2வது தமிழில் நடித்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கியிருந்தார். இதில்தான் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்பொது நிச்சயமாக நியாபகம் வந்திருக்கும் என நினைக்கிறன். இவர் வேறுயாருமில்லை நடிகை பூஜா ஹெக்டே தான் (Pooja Hgede).




இதையும் படிங்க: அஜித் சார் அந்த பாடலை எழுதியபோது என்னை கட்டிப்பிடிச்சு பாராட்டினார் – பாடலாசிரியர் விவேகா
நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
கடந்த 1990ம் ஆண்டில் அக்டோபர் 13ம் தேதியில் மும்பயில் பிறந்தவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் துளு மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தவர். இவர் ஆரம்பத்தில் சாதாரண நபர்களை போலவே பள்ளி, கல்லூரி போன்றவற்றில் தனது படிப்பை முடித்துவிட்டார். மேலும் இவர் பரதநாட்டியத்தில் சிறந்தவரும் கூட, அந்த வகையில் இவர் கடந்த 2009ம் ஆண்டில் நடந்த மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் கலந்துகொண்டிருந்தனர். இதன் மூலமாக பிரபலமான இவர், கடந்த 2012ம் ஆண்டில் வெளியான முகமூடி என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதையும் படிங்க: நீலாம்பரியாக நடிக்க வைக்க முதலில் அந்த நடிகையிடமே பேசினோம் – நடிகர் ரஜினிகந்த் ஓபன் டாக்
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில், நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கில் நடித்துவந்தார். மேலும் இவர் தற்போது, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி படங்களில் தனது கவனத்தை செலுத்திவருகிறார். மேலும் தளபதி விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.