அஜித் குமாரின் AK64 படத்தின் ப்ரீ புரொடக்ஷன் ஓவர்.. ஷூட்டிங்கில் இனி தாமதமில்லை- ஆதிக் ரவிச்சந்திரன்!
AK64 Movie Shooting Update: தமிழ் சினிமாவில் பேமஸ் இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர்தான் ஆதிக் ரவிச்சந்திரன். இவர்தான் அஜித் குமாரின் AK64 படத்தை இயக்கவுள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இவர், செய்தியாளர்கள் சந்திப்பில் AK64 படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் முடிந்ததாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யை அடுத்ததாக பிரபல நாயகனாக இருந்துவருபவர் தல அஜித் குமார் (Ajith Kumar). இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கியிருந்த நிலையில், கடந்த 2025ம் ஆனது ஏப்ரல் மாதத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் அஜித் குமாருக்கு இணையாக திரிஷா கிருஷ்ணன் நடித்திருந்தார். இந்த படமானது இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது என்றே கூறலாம். அந்த வகையில் இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்த கையேடு கார் ரேஸ் பயிற்சியில் அஜித் குமார் இணைந்திருந்தார். கிட்டத்தட்ட 1 ஆண்டுகாலமாக இந்த கார் ரேஸ் பயிற்சியில் அஜித் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவரின் AK64 படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள நிலையில், இப்படத்தின் அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றின்போது செய்தியாளர்களை சந்தித்த ஆதிக் ரவிச்சந்திரன், AK64 பட ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: தளபதி திருவிழா… ஜன நாயகன் பட இசைவெளியீட்டு விழாவில் சங்கமிக்கும் பாடகர்கள்!
அஜித் குமாரின் AK64 திரைப்படம் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட் :
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆதிக் ரவிச்சந்திரன், அதில் ” அஜித் சாரின் AK64 திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் பர் ப்ரொடக்ஷன் பணிகள் விரைவில் நிறைவடையவுள்ளது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2026ம் ஆனது பிப்ரவரி மாதத்தில் 2ம் தேதிக்குள் தொடங்கிவிடுவோம். அஜித் சாறுடன் நான் பணியாற்றும் ஒரு ஸ்பெஷலான படமாக இது இருக்கும். குட் பேட் அக்லி படத்திற்கு பின் அஜித் சார் இந்த படத்தை எனக்கு கொடுத்திருக்காரு. அதனால் எனக்கும் இந்த் படம் மிகவும் ஸ்பெஷலான திரைப்படம்தான்.
இதையும் படிங்க: வருத்தத்துடன் பூரிசேதுபதி படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்த விஜய் சேதுபதி.. வைரலாகும் வீடியோ!
அஜித் குமாரின் பார்வையில் நாம் அனைவரும் ஒரு முன் உதாரணமாக தான் பார்க்கிறோம். அவர் சினிமாவை கடந்து, அவரின் விருப்பமான கார் ரேஸ் மீதும் தனது ஆர்வத்தை கட்டிவருகிறார். மேலும் அவர் இந்தியாவிற்கு மிகப்பெரிய பெருமையை தேடிக்கொடுத்திருக்கிறார். மேலும் அவர் கலந்துகொள்ளவுள்ள கார் ரேஸில் வெற்றிபெற நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
அஜித் குமார் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு :
#Ajith sir 🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 next stop Hollywood🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🏻🙏🏻 pic.twitter.com/fKrztdFdBH
— Adhik Ravichandran (@Adhikravi) October 31, 2025
நடிகர் அஜித் குமாரின் AK64 பட ஷூட்டிங் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என இயக்குநர் கூறிய நிலையில், இது தொடர்பான அறிவிப்புகள் வரும் 2026ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.