Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Jana Nayagan: தளபதி திருவிழா… ஜன நாயகன் பட இசைவெளியீட்டு விழாவில் சங்கமிக்கும் பாடகர்கள்!

Jana Nayagan Audio Launch: தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகிவருவதுதான் ஜன நாயகன். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் வெளியாகிறது. விஜய்யின் கடைசி படம் என்ற நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக மலேசியாவில் நடக்கிறது. இதில் பிரம்மாண்ட பாடகர்கள் பாடல்கள் படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Jana Nayagan: தளபதி திருவிழா… ஜன நாயகன் பட இசைவெளியீட்டு விழாவில் சங்கமிக்கும் பாடகர்கள்!
சைந்தவி, தளபதி விஜய் மற்றும் ஆண்ட்ரியாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 24 Nov 2025 14:32 PM IST

கோலிவுட் சினிமாவில் உச்ச நாயகனாக இருப்பவர்தான் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவரின் நடிப்பில் இதுவரை மொத்தமாக 68 திரைப்படங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், 69வது படமாக உருவாகியிருப்பதுதான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த திரைப்படத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே (Pooja Hegde) இணைந்து நடித்துள்ளனர். மேலும் இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் (H. Vinoth) இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து தளபதி கச்சேரி என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படத்தின் 2வது பாடலும் மிக விரைவில் வெளியாகவுள்ளது. அந்த வகையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா (Audio Launch) எப்போது எங்கு நடைபெறுகிறது என்பது குறித்து சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது.

ஜன நாயகன் பட இசை வெளியிட்டு விழா “தளபதி திருவிழா” (Thalapathy Thiruvizha) என்ற பெயரில், 2025 டிசம்பர் 27ம் தேதியில் மலேசியாவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய்யின் படத்திலிருந்து கிட்டத்தட்ட 35 பாடல்கள் பாடப்படுவதாக படக்குழு அறிவித்திருந்தது. அதில் எந்தெந்த பாடகர்கள் பாடவுள்ளனர் என்பது குறித்து படக்குழு தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இதையும் படிங்க: வருத்தத்துடன் பூரிசேதுபதி படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்த விஜய் சேதுபதி.. வைரலாகும் வீடியோ!

தளபதி திருவிழா நிகழ்ச்சி குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

இந்த தளபதி திருவிழா அந்நிகழ்ச்சியில், பாடகர்கள் சைந்தவி, அனுராதா, ஆண்ட்ரியா, திப்பு மற்றும் எஸ்.பி. சரண் போன்ற பாடகர்கள் இணைந்து பாடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த ஜன நாயகன் படமானது தளபதி விஜய்யின் கடைசி திரைப்படம் என்ற நிலையில், இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரபாஸின் மாஸான நடனத்தில்.. வெளியானது ‘தி ராஜா சாப்’ படத்தின் முதல் பாடல்!

இந்த நிகழ்ச்சி மட்டுமே சுமார் ரூ. 60 முதல் 70 கோடி பட்ஜெட்டிற்கு தயாராகி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த படத்தின் ஆடியோ லான்ச்சை முதலில் தமிழகத்தில் நடத்த திட்டமிட்ட நிலையில், அதிகம் கூட்டம் கூடும் என்ற காரணத்திலால் மலேசியாவில் நடந்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி திருவிழா நிகழ்ச்சியில் பாடும் ஆண்ட்ரியா குறித்த பதிவு :

விஜய்யின் இந்த ஜன நாயகன் திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புகள் இருந்து வரும் நிலையில், தொடர்ந்து இப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அதன்படி இப்படத்தின் 2வது பாடல் வரும் 2025 டிசம்பர் 4ம் தேதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ரிலீசிற்கு சில வாரங்கள் மட்டும் உள்ள நிலையில், உச்சகட்ட எதிர்பார்ப்புகள் நிலவிவருகிறது.