ரஜினி ரசிகர்களுக்கு பிக் சர்ப்ரைஸ்.. ஜெயிலர் 2 படத்தில் கேமியோ வேடத்தில் இணையும் பாலிவுட் கிங்?
Jailer 2 Update: தமிழ் சினிமாவிலும் சரி, தென்னிந்திய மக்களிடையேயும் சரி சூப்பர் ஸ்டார் என பெருமையுடன் அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் ஜெயிலர் 2 திரைப்படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் நிலையில், இந்த படத்தில் பாலிவுட் பிரபலம் ஒருவர் கேமியோ வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. அது யார் என்பது குறித்து பார்க்கலாம்.
ரஜினிகாந்த் (Rajinikanth) தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக இருந்துவருகிறார். இவருக்கு வயது 70 தாண்டினாலும், தமிழில் இன்னும் பலகோடி பட்ஜெட் படங்களில் அதிரடி நாயகனாக நடித்துவருகிறார். இவர் சினிமாவில் நுழைந்து இந்த 2025ம் ஆண்டுடன் 50 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதன் ஸ்பெஷலாக இவரின் நடிப்பில் வெளியானது கூலி (Coolie). இப்படம் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இதையடுத்து ரஜினியின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் ஜெயிலர்2 (Jailer 2). இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் தயாராகிவருகிறது. இதில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன் மற்றும் யோகி பாபு உட்பட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துவருகிறனர். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியநிலையில், கோவாவில் ஷூட்டிங் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தில் நடிகர் சிவராஜ்குமார், மோகன்லால் போன்ற நடிகர்கள் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளனர். இவர்களை அடுத்தாக பாலிவுட் கிங். நடிகர் ஷாருக்கான் (Shah Rukh Khan) ஜெயிலர் 2 படத்தில் கேமியோ வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. மேலும் இவர் இந்த படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும் ஜெயிலர் 2 படமானது மிக பிரம்மாண்ட கதைக்களத்தில் உருவாகுவதாக ரசிகர்கள் எதிர்பார்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய்க்கு ட்ரிபியூட் செய்யும் படக்குழு – வைரலாகும் வீடியோ




ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கான் இணைவது குறித்து வைரலாகும் பதிவு :
ரஜினிகாந்தின் பிறந்தநாளில் வெளியாகும் ஜெயிலர் 2 பட அப்டேட் :
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் இந்த ஜெயிலர் 2 படமானது உருவாகிவருகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கடந்த 2024ம் ஆண்டு ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. அதை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் 2025 மார்ச் மாதத்தில் தொடங்கிய நிலையில் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் வரும் 2025 டிசம்பர் 12ம் தேதியில் ரஜினிகாந்த் தனது 75வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.
இதையும் படிங்க: யாரும் எதிர்பார்க்காத காம்போ.. ரஜினிகாந்த்தின் தலைவர்173 படத்தை இயக்குபவர் இவரா?
இந்நிலையில் இந்த தேதியில் அவரின் புதிய படத்தின் அறிவிப்புக்களை வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் இந்த ஜெயிலர் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. கடந்த சில மாதங்களுக்கும் மேல் இந்த ஜெயிலர் 2 படத்திலிருந்து எந்தவித அப்டேட்டும் வெளியாகாத நீலையில், ரஜினிகாந்தின் பிறந்தநாளில் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் வெளியாகும் என கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்புகள் டிசம்பர் 10ம் தேதியில் படக்குழு வெளியிடும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.