13 வருடத்திற்கு பின் தமிழில் ரீ எண்டரி.. ஜெயிலர் 2 படத்தில் இணையும் பிரபல நடிகை?
Jailer 2 Movie Update: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அட்டகாசமான நடிப்பில் உருவாகிவரும் படம்தான் ஜெயிலர் 2. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் நிலையில், மிக பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங்கில் பிரபல கன்னட நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. அது யார் என்பது பற்றி தெளிவாக பார்க்கலாம்.
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் (Superstar) என அழைக்கப்பட்டுவருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் நடிப்பில் 172வது திரைப்படமாக உருவாகிவருவதுதான் ஜெயிலர் 2 (Jailer 2) . இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் 1 திரைப்படத்தின் தொடர்ச்சி கதைக்களத்தில், ஜெயிலர் 2 திரைப்படமானது தயாராகிவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இன்னும் சில வாரங்களில் முழுமையாக நிறைவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் யோகி பாபு (Yogi Babu), ரம்யா கிருஷ்ணன், மிர்னான் மேனன், சிவராஜ்குமார், மோகன்லால் (Mohanlal) மற்றும் பல்வேறு பிரபலங்களும் இணைந்தும் நடித்துவருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் பிரம்மாண்ட நடிகர்கள் பலரும் இணைந்து நடித்துவரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் மூலம் தமிழில் 13 வருடங்களுக்கு பின் கன்னட நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக இணையத்தில் தகவல்கள வெளியாகிவருகிறது. அந்த நடிகை வேறு யாருமில்லை, நடிகை மேக்னா ராஜ் (Meghna Raj) தான். இவர் ஜெயிலர் 2 படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.




இதையும் படிங்க : தளபதி விஜய்யின் பாடலுக்கு மவுசு குறைந்துவிட்டதா? ஹேட்டர்ஸ்க்கு யூடியூப் கொடுத்த பதில்!
நடிகை மேக்னா ராஜின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
நடிகை மேக்னா ராஜ், தமிழ் கடந்த 2010ம் ஆண்டில் வெளியான “காதல் சொல்ல வந்தேன்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் “அன்புள்ள சந்தியா” என்ற பாடலின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பின் உயர்திரு 420 மற்றும் நந்தா நந்திதா போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் தமிழில் இறுதியாக கடந்த 2013ம் ஆண்டில் வெளியான இந்த நந்தா நந்திதா என்ற படத்தில்தான் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கருப்பு… விரைவில் வெளியாகும் ரீலீஸ் அப்டேட்!
இந்த படத்திற்கு பின் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில், இவரின் கதாபாத்திரம் மிக முக்கிய பங்கற்றுவதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகிவருகிறது. ஆனால் இந்த தகவலானது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் எப்போது :
இந்த ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் வரும் 2025 டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடைந்துவிடும் நிலையில், இதை தொடர்ந்து இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் பணிகள் ஆரம்பமாகிவிடும். மேலும் இப்படம் எப்போது ரிலீஸ் என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் வரும் 2026ம் ஆண்டு ஜூன் 12ம் தேதியில் வெளியாகும் என அவர் அதில் ஓபனாக தெரிவித்திருந்தார்.