Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிரபாஸின் மாஸான நடனத்தில்.. வெளியானது ‘தி ராஜா சாப்’ படத்தின் முதல் பாடல்!

The Raja Saab 1st Single : தெலுங்கு சினிமாவில் உச்ச நாயகனாக இருந்துவருபவர் பிரபாஸ். இவரின் நடிப்பில் மிக பிரம்மாண்ட ஆக்ஷ்ன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள படம்தான் தி ராஜா சாப். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்துள்ள நிலையில், இந்த படத்தின் முதல் பாடலான ரெபெல் சாப் என்ற பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

பிரபாஸின் மாஸான நடனத்தில்.. வெளியானது ‘தி ராஜா சாப்’ படத்தின் முதல் பாடல்!
தி ராஜா சாப் பட முதல் பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 23 Nov 2025 21:38 PM IST

தென்னிந்திய சினிமாவில் அனைவரும் விரும்பும் நாயகனாக இருந்துவருபவர் பிரபாஸ் (Prabhas). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கல்கி2898ஏடி. கடந்த 2024ம் ஆண்டில் வெளியான இப்படத்தை இயக்குநர் நாக் அஸ்வின் (Nag Ashwin) இயக்கியிருந்தார். இது இந்து கடவுளான கல்கி பகவானின் பிறப்பு தொடர்பான கற்பனை கதையை வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகி ஹாலிவுட் படத்திற்கே டப் கொடுத்திருந்தது என்றே கூறலாம். இந்த படத்தை அடுத்ததாக கண்ணப்பா மற்றும் முறை போன்ற திரைப்படங்களில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். இவரின் நடிப்பில் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்கள் உருவாகிவரும் நிலையில், இவரின் நடிப்பில் ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ளதுதான் தி ராஜா சாப் (The Raja Saab). இந்த படத்தை இயக்குநர் மாருதி இயக்க, பிரபாஸ் ரெட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் மொத்தமாக 3 நடிகைகள் நடித்துள்ளனர். அவர்கள் யாரென்றால், மாளவிகா மோகனன் (Malavika Mohanan), நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார்தான்.

மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் (Thaman S) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் முதல் ட்ரெய்லர் சில வாரங்களுக்கு முன் வெளியானது. இதை தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடலான ரிபெல் சாப் என்ற பாடல் இன்று 2025 நவம்பர் 23ம் தேதியில் வெளியாகியுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய்க்கு ட்ரிபியூட் செய்யும் படக்குழு – வைரலாகும் வீடியோ

தி ராஜா சாப் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

ஜன நாயகன் திரைப்படத்துடன் மோதுகிறதா தி ராஜா சாப்..?

நடிகர் பிரபாஸின் இந்த தி ராஜா சாப் திரைப்படம், ஹாரர் மற்றும் ஆக்ஷன் காமெடி கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படமானது மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள நிலையில், பல ஆண்டுகளுக்கு பின் பிரபாஸ் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. மேலும் இப்படமானது வெளியாகும் அதே தேதியில்தான் தளபதி விஜய்யின் ஜன நாயகன் திரைப்படமானது வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காதல் ஒரு மென்மையான தென்றல் போல உணரும்போது… பராசக்தி படத்தில் இருந்து வெளியானது 2-வது சிங்கிள் புரோமோ – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

இந்த இரு படங்களுக்கும் இடையே தமிழில் மோதல் ஏற்படும் என்ற காரணத்தால் தி ராஜா சாப் படக்குழு இந்த படத்தின் தமிழ் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்துள்ளது. அதன்படி ஜன நாயகன் படம் வெளியான மறுநாளில் 2026ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியில் தமிழ் மொழியில் இப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முடிவின் காரணமாக ஜன நாயகன் மற்றும் தி ராஜா சாப் படங்களுக்கிடையேயான தமிழ் ரிலீஸ் மோதல் தவிர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.