Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காதல் ஒரு மென்மையான தென்றல் போல உணரும்போது… பராசக்தி படத்தில் இருந்து வெளியானது 2-வது சிங்கிள் புரோமோ – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Ratnamala Song Promo | நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பராசக்தி. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வரும் நிலையில் படத்தில் இருந்து இரண்டாவது பாடலான ரத்னமாலா பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

காதல் ஒரு மென்மையான தென்றல் போல உணரும்போது… பராசக்தி படத்தில் இருந்து வெளியானது 2-வது சிங்கிள் புரோமோ – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
ரத்னமாலாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Nov 2025 18:03 PM IST

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து நாயகனாக நடித்தாலும் அந்தப் படங்கள் பெரும்பாலும் காமெடியை மையமாக வைத்தே எடுக்கப்பட்டு வந்தது. காமெடிக்கு எப்போதும் முக்கியதுவம் கொடுத்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த சிலப் படங்களில் இருந்து தனது பாணியை மாற்றி மிகவும் அழுத்தமான கதைகளில் நடிக்கத் தொடங்கினார். தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி சில ஆண்டுகளுக்குள்ளே முன்னணி நடிகர் என்ற இடத்தை தனக்காக தக்கவைத்துக்கொண்டார் சிவகார்த்திகேயன்.

அதன்படி இவரது நடிப்பில் தற்போது 25-வது படமாக உருவாகி வரும் படம் தான் பராசக்தி. பிரபல இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. 1960 காலக்கட்டத்தில் இந்தப் படம் உருவாகுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 1960-ம் ஆண்டு தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகர்கள் ஸ்ரீ லீலா, ரவி மோகன், ராணா டகுபதி, அதர்வா முரளி, பேசில் ஜோசஃப் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

பராசக்தி படத்தின் இரண்டாவது பாடல் ரத்னமாலா புரோமோ வீடியோ:

இந்தநிலையில் இந்தப் படம் வருகின்ற 14-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து முதல் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து இரண்டாவது பாடலான ரத்னமாலா பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் பாடல் வருகின்ற 25-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025 விருதை வென்றார் நடிகர் அஜித்குமார்

பராசக்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… வடசென்னை மற்றும் அரசன் படங்கள் குறித்து ரசிகரின் ஒப்பீடு – வியந்து பேசிய வெற்றிமாறன்