ரஜினியின் பிறந்தநாளில் வராத அப்டேட்.. தலைவர்173 படத்தின் அறிவிப்பு எப்போது தெரியுமா?
Thalaivar 173 Update: ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 படமானது மிக பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. இந்த படத்தை அடுத்ததாக கமல்ஹாசனின் தயாரிப்பில் புது படத்தில் இவர் நடிக்கவுள்ளர். இப்படம் நேற்று 2025 டிசம்பர் 12ல் ரஜினியின் பிறந்தநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெளியாகவில்லை. மேலும் இப்படத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது குறித்து பார்க்கலாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் கூலி (Coolie). இந்த படத்தை தமிழ் பேமஸ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியிருந்த நிலையில், பான் இந்திய மொழிகளில் கடந்த 2025 ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் நடிகர்கள் நாகார்ஜுனா (Nagarjuna), உபேந்திர ராவ், ஆமீர்கான் (Amir Khan) உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது 2025ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்திருந்த படமாகவே அமைந்திருந்தது. மேலும் இவர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கத்தில் ஜெயிலர் 2 (Jailer 2) படத்தில் பிசியாக இருந்துவருகிறார். இப்படத்ததை அடுத்ததாக கமல்ஹாசனின் (Kamal Haasan) தயாரிப்பில் தலைவர் 173 (Thalaivar 173) படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை முதலில் இயக்குநர் சுந்தர் சி (Sundar C) இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரஜினிக்கு ஸ்கிரிப்ட் பிடிக்காத காரணத்தால் அவர் இப்படத்திலிருந்து விலகியிருந்தார்.
மேலும் இப்படத்தை வேறு எந்த இயக்குநர் இயக்கவுள்ளார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இதை தேசிய விருதுபெற்ற இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Ramkumar Balakrishnan) இயக்குவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்படத்தின் அறிவிப்புகள் நேற்று 2025 டிசம்பர் 12ம் தேதியில் ரஜினிகாந்தின் பிறந்தநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெளியாகாவில்லை. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் குறித்த தகவல் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.




இதையும் படிங்க: விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 46 படம்… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ
ரஜினிகாந்தின் தலைவர் 173 திரைப்படத்தின் அப்டேட் :
இப்படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி மற்றும் நடிகர் கதிர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்களாம். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வித்தியாசமான வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: தனுஷ் முதல் மோகன்லால் வரை… ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரபலங்கள்!
மேலும் இப்படத்திற்கு அனிருத் அல்லது சாய் அபயங்கர் இருவரில் ஒருவர் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் அறிவிப்பு ரஜினிகாந்தின் பிறந்தநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் 2025ம் டிசம்பர் 25ம் தேதி அல்லது 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் வெளியாகுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
தலைவர் 173 படம் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு :
#Thalaivar173 Director 🔒
Official Announcement Next Year’s & Shooting Next Year’s…..🥁#Rajinikanth Hero#KamalHaasan Producer pic.twitter.com/RUfaI3IMjn
— Movie Tamil (@_MovieTamil) December 13, 2025
ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். இந்த ஷூட்டிங் 2025 டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடிந்துவிடும் என கூறப்படுகிறது இதை அடுத்ததாக வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.