Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rajinikanth: தனுஷ் முதல் மோகன்லால் வரை… ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரபலங்கள்!

Rajinikanth Birthday Wishes: ரஜினிகாந்த் இன்று (2025 டிசம்பர் 12ம் தேதி தனது 75வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிவருகிறார். இவரின் பிறந்தநாளுக்கு, அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் தங்களின் பிறந்தநாளை வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Rajinikanth: தனுஷ் முதல் மோகன்லால் வரை… ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரபலங்கள்!
ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் மோகன்லால்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 12 Dec 2025 16:09 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) கடந்த 1975ம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் இந்த 2025ம் ஆண்டுடன் சுமார் 50 வருடத்தை சினிமாவில் நிறைவு செய்துள்ளார். தமிழில் கிட்டத்தட்ட 50 வருடமாக பிளாக் ஆண்ட வைட் படம் முதல் தற்போதுள்ள பிரம்மாண்ட தொழில்நுட்பங்கள் வரை பல்வேறு வித்தியாசமான படங்களில் கதாநாயகனாக நடித்து சூப்பர் ஹிட் படங்கள் பலவற்றை கொடுத்துள்ளார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக கூலி (Coolie) திரைப்படம் வெளியானது. இந்த படமானது இந்த 2025ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த சூப்பர் ஹிட் திரைப்படமாகவே அமைந்திருந்தது. இந்நிலையில் இன்று 2025 டிசம்பர் 12ம் தேதியில் ரஜினிகாந்த் தனது 75வது,பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இவரின் பர்த்டே ஸ்பெஷலாக இன்று படையப்பா (Padayappa) படம் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்நிலையில் இவரின் 75வது பிறந்தநாளுக்கு, பிரதமர் மோடி (PM Modi) முதல் மலையாள நடிகர் மோகன்லால் (Mohanlal) வரை பல்வேறு பிரபலங்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் சினிமாவில் எந்நெந்த பிரபலங்கள் வாழ்த்து கூறியுள்ளனர் என்பது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: என்றுமே குறையாத ரஜினிகாந்த் புகழ்.. என்னதான் காரணம்?

ரஜினிகாந்திற்கு பிறந்தநாளை வாழ்த்து சொன்ன தனுஷ் வெளியிட்ட பதிவு :

ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் அவருக்கு பிறந்தநாளை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

ரஜினிகாந்தின் சினிமாவில் 50 வருடத்தை நிறைவு செய்தது மற்றும் அவரின் 75 வயது பிறந்தநாளிற்கு மலையாள நடிகர் மோகன்லால் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தனது பிறந்தநாளை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ”பல தலைமுறைகளைக் கவர்ந்தவர்”.. ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி, முக ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் வாழ்த்து

கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் ரஜினிகாந்திற்கு பிறந்தநாளை வாழ்த்துகளை மனப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

சிம்ரன் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

ரஜினிகாந்திற்கு பிறந்தநாளை வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில் நடிகை சிம்ரனும் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.