ஜன நாயகன் பட ரிலீஸில் எந்த மாற்றமும் இல்லை – வைரலாகும் தகவல்
Jana Nayagan Movie Update: நடிகர் தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் படக்குழு தற்போது விளக்கம் அளித்துள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் அனைவரும் நினைப்பது நிறைய படங்களில் நடித்து நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று. ஆனால் நடிகர் விஜய் அதற்கு மாறாக சினிமா கெரியரில் உச்சத்தில் இருக்கும் போது வெளியே வந்து அரசியலில் முழு நேரமும் ஈடுபட உள்ளதாக அறிவித்தார். இந்த செய்து மக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் அவரது ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. அதற்கு காரணம் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால் இனி படங்களில் நடிப்பதில் இருந்து விலக உள்ளதாக அவர் அறிவித்ததுதான். அதன்படி தற்போது நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயாகன் படம் தான் அவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவித்ததுள்ளனர்.
இந்த நிலையில் இந்தப் படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கி உள்ள நிலையில் நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து பல முன்னணி நடிகர்கள் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது வெளியீட்டிற்கான போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் வெளியீட்டில் தள்ளிப்போவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலானது.




ஜன நாயகன் பட ரிலீஸில் எந்த மாற்றமும் இல்லை:
இந்த நிலையில் வெளிநாடுகளில் நடிகர் விஜயின் ஜன நாயகன் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியதாக தகவல்கள் வெளியானது. பின்பு அந்த முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானதால் படத்தின் வெளியீடு தள்ளிபோகிறதா என்று வதந்திகள் பரவத் தொடங்கியது. ஆனால் அப்படி எதுவும் இல்லை படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக இணையத்தில் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் படம் அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… விறுவிறுப்பான கதைக்களத்துடன் வெளியான குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸ்… விமர்சனம் இதோ
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
No Change in Release Date 💯%, As the Team Said the Film is Releasing on 09.01.2026 ✅️
The Promotions of #JanaNayagan Starts from Next Week 🤞#ThalapathyVijay #HVinoth pic.twitter.com/bpvrqkcCHh
— Movie Tamil (@_MovieTamil) December 14, 2025
Also Read… AK64-ல் அஜித் குமார்- ஸ்ரீலீலா ஜோடி உறுதி… வைரலாகும் வீடியோ!