Parasakthi: பராசக்தி படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்? அட இத்தனை கோடியா?
Parasakthi Digital Release Rights: சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்கராவின் கூட்டணியில் உருவாகியுள்ள படம்தான் பராசக்தி. இப்படம் வரும் 2026 ஆண்டு ஜனவரி 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை எந்த நிறுவனம் பெற்றுள்ளது என்பது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகிவருகிறது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
இயக்குநர் சுதா கொங்கராவின் (Sudha Kongara) இயக்கத்தில் தமிழில் வரும் 2026ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கும் படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) கதாநாயகனாக நடித்துள்ளார். இது இவரின் 25வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியிருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, சென்னை, இலங்கை உட்பட பல்வேறு இடங்களில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுவந்திருந்தது. இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுடன் நடிகர்கள் ரவி மோகன் (Ravi Mohan) ,அதர்வா (Athrvaa), ஸ்ரீலீலா உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் தயாராகியுள்ள இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை எந்த நிறுவனம் வாங்கியுள்ளது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் பராசக்தி படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை ஜீ5 (Zee5) என்ற ஓடிடி நிறுவனமானது வாங்கியுள்ளதாம். மொத்தம் எத்தனை கோடிகளுக்கு தெரியுமா? ரூ 52 கோடிகள் கொடுத்து இப்படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை இந்நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. இது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை.




இதையும் படிங்க: பராசக்தி ஃபீவர் தொடங்கியது… படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்
சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமை தொடர்பாக வைரலாகும் பதிவு :
Siva Karthikeyan’s #Parasakthi Digital Rights Signed by Zee5 for record price of 52cr 🔥
PONGAL RELEASE pic.twitter.com/0jVvvpmXgf
— Karthik Ravivarma (@Karthikravivarm) December 15, 2025
பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் பராசக்தி பட ப்ரோமோஷன் :
நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படமாக இந்த பராசக்தி தயாராகியுள்ளது. இந்த படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்ப்புகள் இருந்துவந்தது. அந்த வகையில் இதுவரை சிவகார்த்திகேயனின் எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு இந்த பராசக்தி படத்திற்கு ப்ரோமோஷன் பணிகள் பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது. இப்படத்திற்கு முன் தளபதி விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் வெளியாகும் நிலையில், அந்த படத்தின் ப்ரோமோஷனுக்கு முன்பே இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவந்தது.
இதையும் படிங்க: கொம்புசீவி பட நடிகை யார் தெரியுமா? நாட்டாமை பட நடிகையின் மகளாம்- வெளிப்படையாக சொன்ன இயக்குநர் பொன்ராம்!
மேலும் இப்படம் ஜன நாயகன் படத்திற்கு போட்டியாக வெளியிடப்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. தளபதி விஜய்யின் கடைசி திரைப்படம் என்ற நிலையில், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்று வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பராசக்த்தி படத்தின் ஸ்பெஷலான 10 நிமிட காட்சி வரும் 2025 டிசம்பர் 18ம் தேதியில் வெளியாகுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து இப்படத்தின் இசைவெளியீட்டு விழா தொடர்பான அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.