Sarathkumar: சினிமா என்பதே அதுபோலத்தான்.. ரஜினிகாந்த் சாரும் இதுதான் என்னிடம் சொன்னாரு- சரத்குமார் பேச்சு!
Sarathkumar About Cinema: கோலிவுட் சினிமாவில் 90ஸ் முதல் தற்போதுவரை பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சரத்குமார். இவரின் நடிப்பில் கொம்புசீவி என்ற படமானது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சரத்குமார், சினிமாவின் உச்சம் ரஜினிகாந்த் சொன்ன விஷயம் குறித்து மனம் திறந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவர்தான் சரத்குமார் (Sarathkumar) இவரின் நடிப்பில் இறுதியாக டியூட் (Dude) என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகை மமிதா பைஜூவின் (Mamitha Baiju) தந்தை வேடத்தில் இவர் நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025 அக்டோபர் மாதத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு அடுத்தாக மேலும் இந்த 2025ம் ஆண்டில் புது படம் ஒன்று வெளியாகவுள்ளது அதுதான் கொம்புசீவி (Kombuseevi). இந்த படத்தில் மறைந்த முன்னாள் நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் (Shanmuga Pandian) நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் பொன்ராம் (Ponram) இயக்கியுள்ள நிலையில், வரும் 2025ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.
அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகர் சரத்குமார் கலந்துகொண்டிருந்தார். அந்த நேர்காணலில் அவர், ரசிகர்கள் குறித்தும் சினிமாவின் உச்சம் பற்றி ரஜினிகாந்த் (Rajinikanth) தனக்கு சொன்ன விஷயம் குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: கத்தி படத்திற்கு வேறு ஒரு கிளைமாக்ஸ் இருந்தது – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்
சினிமாவின் உச்சம் பற்றி ரஜினிகாந்த் பேசியது குறித்து சரத்குமார் பகிர்ந்த விஷயம் :
அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சரத்குமார், ” சினிமாவில் ஆடியன்ஸ் மனதை நீங்கள் பிடித்துவிட்டீர்கள் என்றால், அவர்களுக்கு நீங்கள் எப்போதும் ஹீரோதான். மேலும் ஒருமுறை ரஜினிகாந்த் சார் என்னிடம் சொன்னாரு, ஒரு கிரீஸ் மற்றும் அயல் தடவைப்பாட்டை ஒரு இரும்பு தூணின் மேலே நாம் அமர்ந்திருக்கிறேன். அந்த தூண் வழிவிக்கொண்டே இருக்கிறது, கீழிருந்து ஒருவர் மேல வந்துகொண்டு இருக்கிறார், அவரை மேலேயும் விடமுடியாது, நாமும் கீழே செல்ல முடியாது.
இதையும் படிங்க: விஜய்க்கு அரசியல் வர பல காரணங்கள் இருக்கலாம்…ஆனால் அதுவும் ஒரு காரணம்- எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு!
கீழ் உள்ளவன் முயற்சி செய்துகொண்டே இருக்கிறார், ஆனால் வழிவிவிடவும் கூடாது. அதனால் நான் மிகவும் இறுக்கமாக பிடித்திருக்கிறேன் என அவர் என்னிடம் கூறினார். உண்மையில் இதுதான் சினிமா. உண்மையிலே இரும்பு தூணில் கிரீஸ் தடவப்பட்டதுதான் சினிமா” என அதில் சரத்குமாரும் ஒப்புக்கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
சினிமா குறித்து சரத்குமார் பேசிய வீடியோ பதிவு :
“When you reach the audience’s mind, you are Hero always🌟. #Rajinikanth sir once said in greece is put on a iron piller, we are sitting on the top & it’s sliding. Another person is climbing on that, eventhough we should hold strong😁🔥”
– #Sarathkumarpic.twitter.com/mlTlQx3xa7— AmuthaBharathi (@CinemaWithAB) December 15, 2025
சரத்குமார் தற்போது படங்களில் மிக முக்கிய வேடங்களை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை பல்வேறு படங்கள் வெளியாகியுள்ள நிலையில், சமீப காலமாக இவர் தேர்ந்தெடுத்து நடித்துவரும் கதாபாத்திரங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது