AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிக்பாஸில் போட்டியாளர்கள் குறித்து புறணி பேசும் அமித், சாண்ட்ரா – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 74-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி தொடங்கி இத்தனை நாட்கள் ஆகியும் சுவாரஸ்யம் மட்டும் நிகழ்ச்சி மீது பார்வையாளர்களுக்கு இன்னும் பெரிய அளவில் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸில் போட்டியாளர்கள் குறித்து புறணி பேசும் அமித், சாண்ட்ரா – வைரலாகும் வீடியோ
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Dec 2025 10:43 AM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி தொடர்ந்து பல நிகழ்வுகள் மற்றும் மாற்றங்கள் நடந்தாலும் புறணி பேசுதல் மட்டும் மாறவே இல்லை. தொடர்ந்து 8 சீசன்களில் இல்லாத பல மாற்றங்களை இந்த பிக்பஸ் வீட்டிலும் விளையாட்டிலும் நிகழ்ச்சி குழு மெனக்கெட்டு மாற்றி இருந்தாலும் போட்டியாளர்கள் முந்தைய சீசன்களில் இருந்து ஒரே ஒரு விசயத்தை மட்டும் மாற்றாமல் தொடர்ந்து செய்து வருகின்றனர். அது புறணி பேசுதல் மட்டுமே செய்து வருகின்றனர். இந்த சீசனில் வீட்டில் பல மாற்றங்கள் இருந்தது. முன்பு எப்போது இல்லாத ஒரு வீடாக தற்போது மிகவும் வசதியான வீடாக மாற்றப்பட்டு இருந்தது. நிகழ்ச்சி தொடங்கிய போதே அந்த வசிதகளை அனுபவிக்க பல டாஸ்குகள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமகவே வீட்டில் நுழைந்த முதல் நாளே சண்டையும் போட்டியாளர்களிடையே ஏற்பட்டது.

அதன்படி முதல் நாள் தொடங்கிய சண்டை, பொறாமை ஆகியவை தற்போது 74-வது நாள் வந்தும் மாறவில்லை. பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகளை காட்டுவதைவிட டாக்ஸிக்கான அதிக விசயங்களை இந்த சீசனில் உள்ள போட்டியாளர்கள் தொடர்ந்து காட்டி வருகின்றனர். இது குறித்து ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் மாறிமாறி கூறினாலும் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொடர்ந்து பார்வதி சண்டையிட்டு வந்த நிலையில் தற்போது அந்த பதவியை சாண்ட்ரா எடுத்துள்ளார். வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களும் தனக்கு எதிராக செயல்படுவதாக கூறி வருகிறார்.

பிக்பாஸில் போட்டியாளர்கள் குறித்து புறணி பேசும் அமித், சாண்ட்ரா:

இந்த நிலையில் சாண்ட்ராவின் கணவர் பிரஜின் 9-வது வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எவிக்டாகி வெளியேறிய பிறகு திவ்யா மீது கடும் கோபத்தில் இருக்கும் சாண்ட்ரா தொடர்ந்து அவரிடம் சண்டையிடுவது மட்டும் இன்றி அவர் குறித்து மற்றப் போட்டியாளர்களிடம் புறணி பேசி வந்தார். இதில் அதிக அளவில் அமித்திடம் பேசி வந்த சாண்ட்ரா தற்போது அமித் மற்றும் சாண்ட்ரா இருவரும் இணைந்து புறணி பேசி வருகிறார்கள். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் அனைவரிடம் சண்டையிடும் சாண்ட்ரா… வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜன நாயகன் படத்தின் ஓடிடி உரிமையை தட்டித்தூக்கிய பிரபல நிறுவனம்? வைரலாகும் தகவல்

Follow Us