பிக்பாஸில் சாண்ட்ராவின் செயலால் கடுப்பாகும் ஒட்டுமொத்த போட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களாக சாண்ட்ராவின் செயல் ரசிகர்களிடையே மட்டும் இன்றி போட்டியாளர்களிடையேயும் தொடர்ந்து வெறுப்பை ஏற்படுத்தி வருகின்றது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பைப் பெறும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் தற்போது 9-வது சீசன் தற்போது நடைப்பெற்று வருகின்றது. அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடர்ந்து 10 வாரங்கள் முடிவடைந்து 11-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து பல நெகட்டிவ் விமர்சனத்தைப் பெற்று வருகின்றது. மேலும் வாரம் வாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ள நிகழ்ச்சி குழு தொடர்ந்து பல டாஸ்குகளை வழங்கி வருகின்றது. இந்த 9-வது சீசனில் தொடர்ந்து பல மாற்றங்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது. மாற்றங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து இருந்தாலும் தொடர்ந்து போட்டியாளர்களின் சண்டை பார்வையாளர்களிடையே நிகழ்ச்சியின் மீது வெறுப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த கருத்தை மாற்றுவதற்காக நிகழ்ச்சி குழுவும் நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த பிக்பாஸ் வீட்டில் இந்த 11-வது வாரம் வீட்டு தலையாக கானா வினோத் தேர்வாகியுள்ளார். தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கிற்காக வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மூன்று அணியினராக பிரிந்துள்ளனர். இவர்கள் போட்டிப்போட்டு யார் வெற்றிப் பெறுகிறார்களோ அவர்களில் இருந்து ஒரு போட்டியாளரின் குடும்பம் அடுத்த வாரத்தில் நடைபெறும் ஃப்ரீஸ் டாஸ்கில் ஒரு நாள் முழுவதும் தங்க வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த போட்டியில் போட்டியாளர்கள் மிகவும் ஆர்வமாக செயல்பட்டு வருகின்றனர்.




சாண்ட்ராவின் செயலால் கடுப்பாகும் ஒட்டுமொத்த போட்டியாளர்கள்:
தொடர்ந்து போட்டியில் கவனம் செலுத்தி வந்தாலும் பிக்பாஸ் வீட்டில் சாண்ட்ராவின் செயல் மற்ற போட்டியாளர்களிடையே கடுப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதனை வெளிப்படையாக போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் பேசிக்கொண்டு இருந்த நிலையில் நேரடியாக சாண்ட்ராவிடமே கூறிவிடுகின்றனர். இதனால் கடுப்பான சாண்ட்ரா அழுகும் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… Jana Nayagan: இணையத்தை தெறிக்கவிடும் ஜன நாயகன் அப்டேட்.. 2வது பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா?
சாண்ட்ராவின் செயலால் கடுப்பாகும் ஒட்டுமொத்த போட்டியாளர்கள்:
#Day73 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/FpjR7szxPB
— Vijay Television (@vijaytelevision) December 17, 2025
Also Read… 20 ஆண்டுகளைக் கடந்தது விஷாலின் சண்டக்கோழி படம்… லிங்குசாமி வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு