Arasan: அரசன் படத்தில் இணைந்தாரா ஆண்ட்ரியா? இன்ஸ்டாகிராம் பதிவால் ஹேப்பியில் ரசிகர்கள்!
Andrea Jeremiah Instagram Post: தமிழ் சினிமாவில் பிரபல நடிகை மற்றும் பாடகியாக வலம்வருபவர் ஆண்ட்ரியா ஜெரெமையா. இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து படங்கள் உருவாகிவருகிறது. மேலும் இவர் வெற்றிமாறனின் அரசன் படத்தில் நடிக்கிறாரா? என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துவந்த நிலையில், தற்போது அவர் வெளியிட்ட பதிவு ரசிகர்கள் ஹேப்பியில் உள்ளனர்.
நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா (Andrea jeremiah) தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தற்போது தமிழில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியக வெளியான திரைப்படம்தான் மாஸ்க் (Mask). இந்த படத்தில் நடிகர் கவின் ராஜ் (Kavin Raj) கதாநாயகனாக நடிக்க, அவருக்கு வில்லன் வேடத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்தார். இப்படமானது கடந்த 2025 நவம்பர் மாத இறுதியில் வெளியாகியிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக ஆண்ட்ரியாவின் நடிப்பில் தமிழில் படங்களும் உருவாகிவருகிறது. இவர் வெற்றிமாறனின் (Vetrimaaran) தயாரிப்பின் கீழ் தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார்.
அந்த வகையில் ஆண்ட்ரியா அவரின் இயக்கத்தில் உருவாகிவரும் அரசன் (Arasan) படத்தில் நடிக்கிறாரா? என ரசிகர்களிடையே தொடர்ந்து கேள்விகள் எழுந்துவருகிறது. மேலும் நேர்காணல் ஒன்றில் பேசிய ஆண்ட்ரியா, நடிப்பதுபோன்று தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.




இதையும் படிக்க : பராசக்தி ஒரு அரசியல் படம் மட்டுமல்ல – இயக்குநர் சுதா கொங்கரா
நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
இந்த பதிவில் நடிகை ஆண்ட்ரியா, “வட சென்னை படத்தில் அவர் நடித்த “சந்திரா” கதாபாத்திரத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அரசன் படத்திலும் இவர் நடிக்கிறார் என்பதற்கு ஒரு ஹின்ட் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக அரசன் படத்தின் ஷூட்டிங் தொடர்பான வீடியோ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ஒரு பேரே வரலாறு… வைபாக வெளியானது ஜன நாயகன் 2-வது சிங்கிள் வீடியோ புரோமோ
அந்த வகையில் தற்போது அரசன் படத்தின் ஷூட்டிங் கோவில்பட்டியில் நடந்துவரும் நிலையில், விரைவில் அங்கு ஷூட்டிங் முடிந்துவிடும் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து மேலும் ஷூட்டிங் சென்னையில் நடைபெறும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
வட சென்னை உலகத்தில் அரசன் :
சிலம்பரசனின் 49வது திரைப்படமாக இந்த அரசன் உருவாகிவருகிறது. இதை வெற்றிமாறன் இயக்க, கலைப்புலி எஸ் தாணு தயாரித்துவருகிறார். மேலும் இதற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை சமந்தாவை நடிக்கவைக்க பேசப்பட்டுவரும் நிலையில், விரைவில் நடிகை யார் என்பது பற்றிய அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.