Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kiccha Sudeep: நடிகை குறித்து எடக்குமடக்கான கேள்வி.. அசத்தல் பதிலளித்த கிச்சா சுதீப்.. ரசிகர்களிடையே பாராட்டு!

Kiccha Sudeep Defends Actress: நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் என பல்வேறு மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இவரின் நடிப்பில் உருவாகியுள்ள மார்க் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றிருந்தது. இதில் செய்தியாளர் ஒருவர் நடிகைகள் குறித்து கேள்வி கேட்ட நிலையில், கிச்சா சுதீப் செய்த விசயம் பாராட்டப்பட்டு வருகிறது.

Kiccha Sudeep: நடிகை குறித்து எடக்குமடக்கான கேள்வி.. அசத்தல் பதிலளித்த கிச்சா சுதீப்.. ரசிகர்களிடையே பாராட்டு!
கிச்சா சுதீப்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 16 Dec 2025 22:09 PM IST

ஆரம்பத்தில் கன்னட சினிமாவில் துணை நடிகராக நடித்து தனது சினிமா பயணத்தை தொடங்கிவர் நடிகர் கிச்சா சுதீப் (Kiccha Sudeep). இவர் கடந்த 1997ம் ஆண்டில் வெளியான தயாவ்வா என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். மேலும் இவருக்கு தென்னிந்திய பிரபலத்தை கொடுத்த படமாக அமைந்தது நான் ஈ (Naan ee). கடந்த 2012ம் ஆண்டில் வெளியான இப்படத்தை இயக்குநர் ராஜமௌலி (Rajamouli) இயக்க, நானி (Nani) மற்றும் சமந்தா இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து தமிழ் மக்களிடையே இவர் பிரபலமானார். இந்த படத்தை அடுத்ததாக பல தமிழ் படங்களில் இவர் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். அந்த வகையில் தற்போது சினிமாவில் இவர் ஹீரோவாக படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் 2025ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கும் படம்தான் மார்க் (Mark). கன்னட மொழியி அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் விஜய் கார்த்திகேயா (Vijay Karthikeyaa) இயக்கியுள்ளார். இப்படமானது தமிழ் உட்பட பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது.

அந்த நவகையில் நேற்று 2025 டிசம்பர் 15ம் தேதியில் இந்த படத்தின் பாடல் ரிலீஸ் நிகழ்ச்சியில் சென்னையில் நடைபெற்றிருந்தது. அதை தொடர்ந்து இப்படத்தின் தமிழ் செய்தியாளர்கள் சந்திப்பும் நடைபெற்றிருந்தது. அதில் செய்தியாளர் ஒருவர், நடிகை குறித்து எடக்கு மடக்கான கேள்வியை நடிகர் கிச்சா சுதீப் செய்த விஷயம் இணையத்தில் பாராட்டப்பட்டுவருகிறது. தற்போது இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: இணையத்தை தெறிக்கவிடும் ஜன நாயகன் அப்டேட்.. 2வது பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் கிச்சா சுதீப்பின் வீடியோ :

இந்த வீடியோவில் செய்தியாளர் ஒருவர் இப்படத்தின் நடிகையிடம் ,”வணங்கான் படத்தில் நீங்க பயங்கரமாக பண்ணிருப்பீங்க, டயலாக்கும் நன்றாக பேசியிருப்பிறீங்க. இந்த படத்தில் எப்படி, உங்களை ஏன் ஓரமாக உட்கார வைத்திருக்கிறார்கள்? என கேள்வி எழுப்பினார். உடனே பேசிய நடிகர் கிச்சா சுதீப், ” நீங்க கேட்டதுபோல் எந்த சந்தீப்பிலும் ஒரு கேள்வி கூட வரவில்லை, அதுக்குத்தான் அந்த படங்கள் நல்ல வந்துச்சி என கூறினார். பின் ஓரமாக உட்காந்திருந்த நடிகைகளை அவர் இருந்த இருக்கையில், மேடையின் நடுவில் உட்காரவைத்தார்.

இதையும் படிங்க: தலைவா… ரீ ரிலீஸில் படையப்பா படத்தைப் பார்த்த சிவகார்த்திகேயன்.. வைரலாகும் வீடியோ!

மேலும் பேசிய கிச்சா சுதீப், “ஒரு கொண்டாட்டம் என்றால் அதை கொண்டாடத்தான் செய்யவேண்டும், அப்போது இதுபோன்ற கேள்வி வந்தால் நன்றாகவா இருக்கும். இந்த் மார்க் படத்தின் ஷூட்டிங்கில் நடிகைகள் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை அவர்களிடமே கேட்டு தெரிந்துகொள்ளுங்க”. என நடிகைகளிடம் மைக்கை கொடுத்துவிட்டு நடிகர் கிச்சா சுதீப் மேடையில் இறுதி வரிசையில் சென்று உட்காந்திருந்தார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது.