Rukmini Vasanth: சினிமாவின் ஆரம்பத்தில் நெகடிவ் ரோலில் நடிப்பது டேஞ்சர்… காந்தாரா படம் குறித்து மனம் திறந்த ருக்மிணி வசந்த்!
Rukmini Vasanth About Negative Role Risk: தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் கனவு நாயகியாக வலம்வருபவர் ருக்மிணி வசந்த். இவர் தற்போது பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில் சமீபத்தில் ஆங்கில நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், காந்தாரா சாப்டர் 1 படத்தில் நெகடிவ் வேடத்தில் நடித்து குறித்து பேசியுள்ளார்.
கன்னட சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth). இவர் நடிப்பில் கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் இவருக்கு தமிழ் சினிமாவில் அறிமுக திரைப்படமாக அமைந்திருந்தது ஏஸ் (Ace). நடிகர் விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) நடிப்பில் இப்படம் கடந்த 2025 மே மாதத்தின் இறுதியில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் ருக்கு என்ற வேடத்தில் நடித்து தமிழில் பிரபலமானார். இதனை அடுத்ததாக சிவகார்த்திகேயனின் மதராஸி (Madaraasi) படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் மேலும் தமிழ் ரசிகர்களிடையே பேமஸ் ஆனார். இந்த படங்களை தொடர்ந்து இவரின் ரசிகர்களை பதறவைத்த படம்தான் காந்தாரா சாப்டர் 1 (Kantara Chapter 1).
இந்த படத்தில் ஆரம்பத்தில் அழகான ராணியின் வேடத்தில் இவர் காண்பிக்கப்பட்டிருந்தாலும், இந்த படத்தில் முக்கிய வில்லனாக இவர் நடித்திருந்தார். அந்த வகையில் சமீபத்தில் ஆங்கில பத்திரிக்கை நேர்காணல் ஒன்றில் இவர் கலந்துகொண்டார், அதில் பேசிய இவர், சினிமாவின் ஆரம்பத்தில் நெகடிவ் வேடங்களில் நடிப்பது எவ்வளவு ஆபத்து என தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: சூர்யா 46 படப்பிடிப்பு தளத்தில் சூர்யா செய்த நெகிழ்ச்சி செயல் – வைரலாகும் வீடியோ
காந்தாரா சாப்டர் 1 படத்தில் நெகடிவ் வேடத்தில் நடித்தது குறித்து ருக்மிணி வசந்த் பகிர்ந்த விஷயம் :
அந்த நேர்காணலில் பேசிய ருக்மிணி வசந்த், “காந்தாரா சாப்டர் 1ன் படத்தில், நெகடிவ் வேடத்தில் நடிப்பது என்பது, எனது சினிமா வாழ்க்கையில் ஆஆரம்பத்திலேயே பரிசோதனை செய்வது ஆபத்தானது. ஆனால் நான் நெகடிவ் வேடத்தில் நடித்ததை மக்கள் விரும்பினார்கள்.
இதையும் படிங்க: 2025-ம் ஆண்டில் கோலிவுட் சினிமாவில் ஹிட் கொடுத்த அறிமுக இயக்குநர்கள் லிஸ்ட்
அதனால் என்னை வெறுக்கவில்லை என பலரும் என்னிடம் கூறினார்கள். மேலும் இந்த படத்தில் எனது கதாபாத்திரம் ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும், இறுதியிலே எதிரியாக மாறுவேன் என யாரையும் எதிர்பார்க்கவில்லை” என அந்த நேர்காணலில் நகைச்சுவையாக பேசியிருந்தார்.
நெகடிவ் வேடத்தில் நடித்தது குறித்து ருக்மிணி வசந்த் பேசிய வீடியோ பதிவு :
“Playing the Antagonist character in #KantaraChapter1 is dangerous to experiment in early of career🤞. People are saying that they loved me playing an evil role, they didn’t hate🫶. Nobody guessed that i will turn out as Antagonist🫰❤️🔥”
– #RukminiVasanthpic.twitter.com/TlnSskjVdB— AmuthaBharathi (@CinemaWithAB) December 17, 2025
நடிகை ருக்மிணி வசந்த் தற்போது தெலுங்கு மொழி படங்களில் நடிப்பதில் தீவிரமாக உள்ளார். ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகும் படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் கன்னடத்தில் நடிகர் யாஷின் டாக்சிக் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகும் புது படத்திலும் நடிப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.