Kombuseevi: சரத்குமார் – சண்முக பாண்டியனின் அதிரடி கதையில்… கொம்புசீவி படம் எப்படி இருக்கு.. விமர்சனங்கள் இதோ!
Kombuseevi Reviews: இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார் மற்றும் சண்முக பாண்டியன் இணைந்து நடித்துள்ள படம்தான் கொம்புசீவி. இப்படமானது இன்று 2025 டிசம்பர் 19ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சனங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சண்முக பாண்டியன் (Shanmuga Pandian). இவர் மறைந்த முன்னாள் நடிகரும், அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்தின் (Vijayakanth) இளையமகன் ஆவார். இவர் தனது தந்தையைப் போல சினிமாவில் ஆர்வம் கட்டிவருகிறார். அந்த வகையில் இவர் விஜயகாந்த் இருக்கும்போதே திரைப்படங்களில் படங்களில் நடித்திருந்த நிலையில், தற்போது முழுமையாக சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவரின் நடிப்பில் ஏற்கனவே இந்த 2025ம் ஆண்டில் படைத்தலைவன் (Padaithalivan) என்ற படமானது வெளியாகியிருந்த நிலையில், இதனை அடுத்து இரண்டாவதாக வெளியாகியுள்ள படம்தான் கொம்புசீவி (Kombuseevi). இந்த படத்தில் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்க, அவருடன் முக்கிய வேடத்தில் சரத்குமார் (Sarathkumar) இணைந்து நடித்துள்ளார். மேலும் இதில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக அறிமுக நடிகை தரணிகா (Tharnika) இணைந்து நடித்துள்ளார்.
இவர் வேறு யாருமில்லை, நாட்டாமை படத்தின் டீச்சராக நடித்த நடிகை ராணியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொம்புசீவி படமானது இன்று 2025 டிசம்பர் 19ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.




இதையும் படிங்க: முடிஞ்சா மிதி.. வித்தியாசமாக நடந்த பிக் பாஸ் வீட்டு தல டாஸ்க்.. FJ – விக்ரம் இடையே மோதல்… வைரலாகும் புரோமோ
கொம்புசீவி படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்கள் குறித்து எக்ஸ் பதிவு :
#Kombuseevi – First Half Superb 🔥
– #ShanmugaPandian’s performance was absolutely brilliant 👏
– The movie is based on a real-life incident that happened in 1996 🕰️
– The scenes featuring #Sarathkumar & ShanmugaPandian, and their looks, were truly amazing 👌
– #U1’s music was… pic.twitter.com/ACUompaR9b— Movie Tamil (@_MovieTamil) December 18, 2025
இந்த கொம்புசீவி படமானது 1996ம் ஆண்டில் உசிலம்பட்டியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சண்முக பாண்டியனின் நடிப்பு அருமையாக வந்துள்ளது. மேலும் இதன் முதல் பாதியில் சரத்குமார் மற்றும் சண்முக பாண்டியன் இணைந்திருக்கும் காட்சியானது மாஸாக உள்ளதாம். யுவன் சங்கர் ராஜாவின் இசையே இந்த படத்தில் பல்வேறு இடங்களில் ஒரு முட்டுக்கட்டையாக உள்ளதாகவும், அறிமுகமக நடிகை தரணிகாவின் நடிப்பு அருமையாக வந்துள்ளதாம் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 2025ல் ரூ 100 கோடிகள் வசூல் செய்த தமிழ் நடிகர்களின் படங்கள் என்னென்ன.. விவரமாக தெரிஞ்சிக்கோங்க!
கொம்புசீவி படத்தின் 2வது பாதி எப்படி இருக்கு :
In the movie “#Kombuseevi”, there are mass scenes for #Sarathkumar and #ShanmugaPandian 💥🔥🎬 pic.twitter.com/2S1j1P8f8y
— Movie Tamil (@_MovieTamil) December 18, 2025
இப்படத்தின் 2வது பாதியும் சிறப்பாகவே அமைந்துள்ளது. இதில் சரத்குமார் மற்றும் சண்முக பாண்டியனிடையே பல எமோஷனல் மற்றும் நகைச்சுவை காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இயக்குநர் பொன்ராம் இந்த படத்தை தாக்கத்துடன் கொடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக இப்படத்திற்கு திரையரங்குகளில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
கொம்புசீவி படத்தை திரையரங்கு சென்று பார்க்கலாமா:
Strong positivity flowing in for #Kombuseevi 🚀
Good first-half reports with packed humour that lands well, setting up an exciting FDFS 💥Yuvan’s music is a total blast 🎶🔥
And that title card surprise – the OG touch hits hard 👌✨ pic.twitter.com/S8cc1GTteJ— Ramesh Bala (@rameshlaus) December 19, 2025
இந்த கொம்பு சீவி படமானது ஆக்ஷ்ன், நகைச்சுவை, எமோஷனல் என பல்வேறு ஜானரின் இணைப்பாக அமைந்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு மக்களிடையே சிறப்பான வரவேற்புகள் இருந்து வருகிறது. ஆக மொத்தத்தில் ஒரு நகைச்சுவை கலந்த ஆக்ஷ்ன் படத்தை பார்க்க விரும்புபவர்களுக்கு இந்த கொம்புசீவி ஏற்ற திரைப்படம். மேலும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்கள் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.