முடிஞ்சா மிதி.. வித்தியாசமாக நடந்த பிக் பாஸ் வீட்டு தல டாஸ்க்.. FJ – விக்ரம் இடையே மோதல்… வைரலாகும் புரோமோ
Bigg Boss 9 Veetu Thala Task: கடந்த 2025 அக்டோபர் மாதம் முதல் தமிழில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 9 தமிழ். இந்நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட 10 வரத்தை கடந்துள்ளது. அந்த வகையில் 11வது வாரத்தின் வீடு தல டாஸ்க் வித்தியாசமாக நடைபெற்றுள்ளது. அது தொடர்பான புரோமோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்துவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 9 (Bigg Boss Season 9). இந்த நிகழ்ச்சியானது கிட்டத்தட்ட 11 வாரத்தை நோக்கி நடைபெற்று வருகிறது. சுமார் 20 போட்டியாளரக்ள் மற்றும் 4 வைல்ட் கார்ட் எண்டரியுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சில், தற்போது வெறும் 13 போட்டியாளர்களுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரத்தில் டபுள் ஏவிக்ஷன் நடந்த நிலையில், ரம்யா ஜோ (Ramya Joo) மற்றும் வியானா (Viyanaa) இருவரும் வெளியேறியிருந்தனர். இந்நிலையில் இன்னும் இந்த வாரத்தில் எந்த போட்டியாளர் வெளியேருவார் என்றும் ஆர்வத்தில் மக்கள் உள்ளனர். அந்தவகையில் இந்த நிகழ்ச்சியானது தொடங்கி 75 நாட்களாகியுள்ளது.
இந்நிலையில், 11வது வாரத்தின் பிக் பாஸ் வீட்டு தல டாஸ்க் இன்று 2025 டிசம்பர் 19ம் தேதியில் நடைபெற்றுள்ளது. இந்த டாஸ்க் மற்ற தல டாஸ்க்குடன் வித்தியாசமாக நடைபெற்றிருந்தது. போட்டியாளர்கள் காலில் பலூன்களை கட்டி அதில் கடைசி வரை யாரிடம் அதிக பலூன் இருக்கிறதோ, அவர்தான் இந்த வாரத்திற்காக பிக் பாஸ் வீட்டு தல என அறிவிக்கப்பட்டிருந்தது இந்த டாஸ்கில் FJ மற்றும் விக்கல்ஸ் விக்ரம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க: பிக்பாஸில் போட்டியாளர்கள் குறித்து புறணி பேசும் அமித், சாண்ட்ரா – வைரலாகும் வீடியோ
பிக் பாஸ் சீசன் 9 75வது நாளின் முதல் ப்ரோமோ வீடியோ பதிவு :
#Day75 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/pwPd6aELf5
— Vijay Television (@vijaytelevision) December 19, 2025
இந்த புரோமோவில் பிக் பாஸ் வீட்டின் தல டாஸ்க் வித்தியாசமாக நடைபெற்றுள்ளது. போட்டியாளர்களின் காலில் பல பலூன்கள் கட்டப்பட்டுள்ளது. அந்த பலூனை உடைத்து அந்த போட்டியாளரை வெளியேற்ற வேண்டும். அந்த விதத்தில் கடைசிவரை எந்த போட்டியாளர் காலில் பலூன் இருக்கிறதோ, அவர்தான் இந்த பிக் பாஸ் சீசன் 9ல் வீட்டின் இந்தவார வீட்டு தல என்பது குறிப்பிடத்தக்கது. இதில் FJ ஆதிரையை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு அவரை காப்பாற்ற முயன்றார். ஆனாலும் அவர் வெளியேறிவிட்டார்.
இதையும் படிங்க: தெறி படத்தில் நைனிகாவை நடிக்கவைக்க மீனா மேம் ஒத்துக்கல – அட்லீ பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
இதனால் விக்கல்ஸ் விக்ரம் இடையே FJ மோதலில் ஈடுபட்டிருந்தார். மேலும் இந்த வாரத்தின் வெட்டு தல டாஸ்கில் கனி மற்றும் கம்ருதீன் இருவர் மட்டுமே இருந்தனர். அதன்படி இந்த வாரத்தில் வீட்டு தலையாக கம்ருதீன் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது வெளியான இந்த முதல் புரோமோ வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.