AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இன்ஸ்டா டூ சி.எம் ஆபீஸ்.. தேவா, ஜீவாவுடன் கலகலப்பாக பேசி ரீல்ஸ் எடுத்த முதல்வர் ஸ்டாலின்..

CM Stalin With Deva and Jeeva: அதேபோல், அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு திட்டம் குறித்து அவர்களிடம் கேள்விகள் எழுப்பினார். பள்ளிகளில் எந்தெந்த உணவுகள் வழங்கப்படுகின்றன, அந்த உணவுகள் பிடித்திருக்கிறதா என்பதையும் மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், சிறுவர்களின் குடும்பத்தினருடனும் முதலமைச்சர் கலந்துரையாடினார்.

இன்ஸ்டா டூ சி.எம் ஆபீஸ்.. தேவா, ஜீவாவுடன் கலகலப்பாக பேசி ரீல்ஸ் எடுத்த முதல்வர் ஸ்டாலின்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 14 Mar 2026 10:39 AM IST

சென்னை, மார்ச் 14, 2026: இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் பிரபலமான பண்ருட்டியைச் சேர்ந்த சிறுவர்கள் தேவா மற்றும் ஜீவாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து கலகலப்பாக கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது சிறுவர்களுடன் முதலமைச்சர் உரையாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அந்த வீடியோவில், சிறுவர்கள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள், பெரியவர்கள் ஆன பிறகு என்ன ஆக வேண்டும் என்ற ஆசை கொண்டிருக்கிறார்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டறிந்தார்.

தேவா ஜீவா உடன் கலகல சந்திப்பு:

அதேபோல், அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு திட்டம் குறித்து அவர்களிடம் கேள்விகள் எழுப்பினார். பள்ளிகளில் எந்தெந்த உணவுகள் வழங்கப்படுகின்றன, அந்த உணவுகள் பிடித்திருக்கிறதா என்பதையும் மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், சிறுவர்களின் குடும்பத்தினருடனும் முதலமைச்சர் கலந்துரையாடினார்.

இதன்போது, தேவா மற்றும் ஜீவா ஆகிய சிறுவர்களுக்கு புத்தகங்கள், பேனாக்கள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களையும் வழங்கினார். மேலும், “நன்றாக படித்து, பிற்காலத்தில் கலெக்டர் அல்லது காவல் அதிகாரி போன்ற உயர்ந்த பதவிகளில் வளர வேண்டும்” என்று வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

ரீல்ஸ் மூலம் அட்வைஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்:

அதே நேரத்தில், சமூக வலைதளங்களில் ரீல்கள் செய்து பிரபலமான அந்த சிறுவர்களின் கோரிக்கைக்கு இணங்க முதலமைச்சர் அவர்களுடன் சேர்ந்து ஒரு ரீலும் பதிவு செய்தார். அந்த ரீல் வீடியோவில், “நீங்கள் ரீல்ஸ்கள் நன்றாக செய்கிறீர்கள். ஆனால் அதையே முழுநேர வேலையாக எடுத்துக்கொள்ளாமல், படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Follow Us