Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நகைச்சுவை படங்களில் நடிக்காமல் இருப்பதற்கு காரணம் இதுதான் – சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

Sivakarthikeyan about Comedy Movies: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பராசக்தி படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்று வரும் நிலையில் சமீபத்தில் அவர் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நகைச்சுவை படங்களில் நடிக்காமல் இருப்பதற்கு காரணம் இதுதான் – சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!
சிவகார்த்திகேயன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Jan 2026 13:38 PM IST

தமிழ் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் தமிழக மக்களிடையே பிரபலம் ஆனவர் சிவகார்த்திகேயன். இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளில் பிரபலம் ஆனதைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் காமெடி நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி மெரினா படத்தின் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு பல ஆண்டுகளாக தொடர்ந்து காமெடியை மையமாக வைத்தே படங்களில் நடித்து வந்தார். இப்படி தொடர்ந்து காமெடியை மையமாக வைத்து உருவான படங்களில் நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் சமீப காலமாக கதைகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

அதன்படி இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பராசக்தி. இந்தப் படம் இந்தி எதிர்ப்பு கொள்கையை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் மிகவும் ஆழமான கதையை மையமாக வைத்து உருவானதால் படத்தினை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நகைச்சுவை படங்களில் நடிக்காமல் இருப்பதற்கு காரணம் இதுதான்:

சமீப காலமாக நகைச்சுவைக் கதைகள் எனக்கு வருவதில்லை. நான் ஏன் நகைச்சுவைப் படங்கள் செய்வதில்லை என்று எல்லோரும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள், ஆனால் யாரும் எனக்கு ஒரு நல்ல நகைச்சுவைக் கதையைக் கொண்டு வருவதில்லை. பட்ஜெட் உட்பட பல காரணிகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. ஆனால் எனது அடுத்த படம் ஒரு முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கும்.

பராசக்தி மற்றும் அமரன் போன்ற படங்கள் என் நடிப்புத் திறனின் ஒரு வேறுபட்ட பரிமாணத்தை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும், நகைச்சுவைப் பொழுதுபோக்குத் திரைப்படங்களில் நடிப்பதை நான் தவறவிடுகிறேன். துரதிர்ஷ்டவசமாக, யாரும் ஒரு முழுமையான நகைச்சுவைக் கதையை என்னிடம் விவரிப்பதில்லை என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Also Read… பஞ்சாயத்து தலைவராக ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தளப் பதிவு:

Also Read… RJ.Balaji: சூர்யாவின் ரசிகர்களே.. அதை தவிர்த்து கருப்பு படத்திலிருந்து இனி எந்த அப்டேட்டும் வராது?- ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!