சுவாரஸ்யமும் த்ரில்லரும் நிறைந்த இந்த மாஸ்க் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
Mask Movie OTT Update: தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் மாஸ்க். சுவாரஸ்யம் மற்றும் த்ரில்லர் நிறைந்த இந்தப் படத்தை தற்போது எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம்21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாஸ்க். இந்தப் படத்தை இயக்குநர் விகர்ணன் அசோக் எழுதி இயக்கி இருந்தார். இது சினிமாவில் இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் கவின் நாயகனாக நடித்து இருந்தார். மேலும் இவருடன் இணைந்து நடிகர்கள் ஆண்ட்ரியா ஜெர்மியா, ருஹானி ஷர்மா, கோமல் சர்மா, பவன் கிருஷ்ணா, சார்லி, ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத், ஜார்ஜ் மரியன், சுப்பிரமணிய சிவா, மூணார் ரமேஷ், வெங்கட் செங்குட்டுவன், பாத்மென், அர்ச்சனா சந்தோக், ஆடுகளம் நரேன், அருள்தாஸ், சத்யஜித், அச்யுத் குமார், நெல்சன் திலீப்குமார் (பின்னணி குரல்), செம்புலி ஜெகன், கார்த்திகேயன் பி. சந்திரன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான க்ராஸ் ரூட் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக தயாரிப்பாளர்கள் வெற்றிமாறன், ஆண்ட்ரியா ஜெரேமியா, எஸ்பி சொக்கலிங்கம், விபின் அக்னிஹோத்ரி ஆகியோர் தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
சுவாரஸ்யம் நிறைந்த மாஸ்க் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
இந்த மாஸ்க் படத்தில் நடிகர் கவின் ப்ரைவேட் டிடெக்ட்டிவ் ஸ்பை என்ற பெயரில் கணவன் மனைவி இடையே உள்ள மனக் கசப்பினை வைத்து காசு சம்பாதிக்கும் நபராக இருக்கிறார். ஆனால் இதில் தனக்கு என்று ஒரு எத்திக்ஸ் இருப்பதாக கூறிக்கொண்டு வலம் வருகிறார் கவின்.




Also Read… Sreeleela: முதல் முறையாக என் நடிப்புக்காக பாராட்டு.. பராசக்தி படம் குறித்து எமோஷனலாக பேசிய ஸ்ரீலீலா!
அதே நேரத்தில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெண்களை பாதுகாக்கும் விதமாக ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார் ஆண்ரியா. இவர் இந்த தொண்டு நிறுவனத்தைக் வைத்துக்கொண்டு பல தவறான காரியங்களை செய்து வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் ஆண்ட்ரியாவின் ஒரு கேசை விசாரிப்பதற்காக கவின் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்.
ஆனால் அந்த வழக்கில் எதிர்பாராதவிதமாக் கவினும் சம்பந்தப்பட்டு இருந்தார். அப்படி இருக்கும் சூழலில் அவர் எப்படி அந்த வழக்கை விசாரித்து முடித்து பிரச்சனைகளில் இருந்து வெளியேறினார் என்பதே படத்தின் கதை.
Also Read… சூர்யா46 பட ஷூட்டிங் இன்னும் முடியவில்லையா? ரசிகர்களிடையே வைரலாகும் மமிதா பைஜூவின் புகைப்படம்!