விஜய் சேதுபதியும் நானும் 3-வது முறையாக இணைந்து ஒரு படம் செய்ய திட்டமிட்டிருந்தோம்… ஆனால் – நலன் குமாரசாமி
Director Nalan Kumarasamy: தமிழ் சினிமாவில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களை இயக்கி வருபவர் இயக்குநர் நலன் குமாரசாமி. இவரது இயக்கத்தில் இன்று வா வாத்தியார் படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் அவர் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் சூது கவ்வும். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இயக்குநர் நலன் குமாரசாமி இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே அவரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் ஆக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நலன் குமாரசாமியின் கூட்டணி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது முறையாகவும் இந்த கூட்டணி அமைந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்படி இவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக கூட்டணி வைத்தப் படம் காதலும் கடந்து போகம். இந்தப் படம் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரொமாண்டிக் காமெடியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இயக்குநர் நலன் குமாரசாமி அளித்தப் பேட்டி ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




விஜய் சேதுபதியுடம் 3-வது முறையாக படம் செய்ய திட்டமிட்டிருந்தோம்:
அதன்படி இயக்குநர் நலன் குமாரசாமி அளித்தப் பேட்டியில் கூறியுள்ளதாவது, விஜய் சேதுபதியும் நானும் மூன்றாவது முறையாக இணைந்து ஒரு படம் செய்யத் திட்டமிட்டிருந்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அப்போது அந்த கதைக்குச் சரியான முடிவைக் கண்டுபிடிக்க என்னால் முடியவில்லை, ஆனால் இப்போது இறுதியாக அது எனக்குக் கிடைத்துவிட்டது என்று அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ஒவ்வொரு தாமதத்திற்கும் ஒரு காரணம் உண்டு… ஜன நாயகன் குறித்து பேசிய கார்த்தி!
இணையத்தில் கவனம் பெறும் நலன் குமாரசாமி பேச்சு:
Dir #Nalan Recent
– #VijaySethupathi and I were planning to do a film together for the third time, but unfortunately, the project was dropped.
– I couldn’t find the right ending for the story back then, but now I finally have it.#VaaVaathiyaar #Karthipic.twitter.com/s2MYRvNnVB— Movie Tamil (@_MovieTamil) January 14, 2026
Also Read… உள்ள வந்தா பவருடி அண்ணன் யாரு தளபதி… 5 ஆண்டுகளை நிறைவு செய்தது விஜயின் மாஸ்டர் படம்