கிளாசிக் படத்தை ரீமேக் செய்ய வாய்ப்பு கிடைத்தால் அந்த படம் தான் நடிப்பேன் – நடிகர் கவின்
Actor Kavin: தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களின் விருப்ப நடிகராக வலம் வருபவர் நடிகர் கவின். இவர் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கிஸ். இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் இருக்கும் கவின் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

சின்னத்திரையில் பிரபலம் ஆகி தற்போது வெள்ளித்திரையில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் கவின் (Actor Kavin). இந்த நிலையில் இவரது நடிப்பில் வருகின்ற 19-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளப் படம் கிஸ். இந்தப் படத்தை நடன இயக்குநர் சதீஸ் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இவர் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் கவின் உடன் இணைந்து நடிகர்கள் ப்ரீத்தி அஸ்ரானி, பிரபு, VTV கணேஷ், ஆர்.ஜே.விஜய், ராவ் ரமேஷ், தேவயானி, சக்தி ராஜ், மேத்யூ வர்கீஸ் என பலர் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பனிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் நடிகர் கவின் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் படம் குறித்து முன்னதாக இவரது நடிப்பில் வெளியான படங்கள் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.




அஜித்தின் அந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசை:
முந்தைய ஒரு கிளாசிக் படத்தை ரீமேக் செய்ய எனக்கு எப்போதாவது வாய்ப்பு கிடைத்தால், நான் அஜித் குமார் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த வாலி படத்தையே தேர்ந்தெடுப்பேன். ஒரு பக்கம் அப்பாவி தம்பியாகவும், மறுபுறம் தந்திரமான அண்ணன் வேடத்திலும் நடிப்பது, ஆராய்வதற்கு நிறைய வாய்ப்புகளை வழங்குகிறது.
ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, இவ்வளவு சக்திவாய்ந்த படத்திற்கு முழு அர்த்தத்தை வழங்க விரும்புகிறேன் என்று நடிகர் கவின் தெரிவித்து இருந்தார். இந்த பேட்டி தற்போது ரசிகரக்ளிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் அஜித் செய்த சம்பவம் – நெகிழ்ந்து பேசிய நடிகை
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#Kavin Recent
– If I ever got the chance to remake an earlier classic, I’d choose Vaali.
– Playing the innocent younger brother on one side and the cunning elder brother on the other offers so much scope to explore.
– But more than anything, I’d want to do full justice to such a… pic.twitter.com/0OBhZ9G3A9— Movie Tamil (@_MovieTamil) September 17, 2025
Also Read… பட்டாச போட்டு மத்தாளம் கொட்டு… ரீ ரிலீஸாகும் அஜித்தின் அட்டகாசம் படம்