Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வித் லவ் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டிய ரஜினிகாந்த் – வைரலாகும் வீடியோ

Rajinikanth Congratulate With Love Movie Team: தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் வித் லவ். இந்த வித் லவ் படக் குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து வாழ்த்திய வீடியோ வைரலாகி வருகின்றது.

வித் லவ் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டிய ரஜினிகாந்த் – வைரலாகும் வீடியோ
வித் லவ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Feb 2026 17:26 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக இளம் தலைமுறையினர் கூட்டணியில் உருவாகும் படங்கள் தொடர்ந்து மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி அறிமுக இயக்குநர் மதன் எழுதி இயக்கிய படம் வித் லவ். இந்தப் படம் கடந்த 06-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக அறிமுகம் ஆகி இருந்தார். மேலும் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் அனஸ்வரா ராஜன் இந்த வித் லவ் படத்தில் நாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அயாஸ் கான், ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன், ஆர்ஜே டிம்பிள் கண்ணா, தேனி முருகன், சரவணன், ரவி மரியா, ஆர்.ஜே.ஆனந்தி, எம். சசிகுமார், கமலேஷ் ஜெகன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான சியோன் பிலிம்ஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிப்பாளர்கள் பாசிலியன் நஸரத், சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

வித் லவ் படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த்:

இந்தப் படம் திரையரங்குகளில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து நடிகரும் தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்தின் தந்தையுமான நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். முன்னதாக பிரியூ ஷோவில் படத்தைப் பார்த்து ரஜினிகாந்த் கொடுத்த விமர்சனம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஜன நாயகன் படத்தை மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்பியது படக்குழு!

சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஆவேஷம் 2 படம் குறித்து முக்கிய அப்டேட் சொன்ன ஃபகத் பாசில்