Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒரு தீர்ப்பெழுதுற அதிகாரத்தை அந்த பரபிரம்மா ஒரு கடைக்கோடி மனுஷன்கிட்ட கொடுத்துருக்கு – வெளியானது சசிகுமாரின் மை லார்ட் படத்தின் ட்ரெய்லர்!

My Lord Movie Trailer: தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக கலக்கி வருகிறார் நடிகர் சசிகுமார். இவரது நடிப்பில் தற்போது உறுவாகி உள்ள படம் மை லார்ட். இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஒரு தீர்ப்பெழுதுற அதிகாரத்தை அந்த பரபிரம்மா ஒரு கடைக்கோடி மனுஷன்கிட்ட கொடுத்துருக்கு – வெளியானது சசிகுமாரின் மை லார்ட் படத்தின் ட்ரெய்லர்!
மை லார்ட்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Jan 2026 19:48 PM IST

தமிழ் சினிமாவில் சாதாரண மக்களின் வாழ்க்கையை படமாக்கி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருபவர் இயக்குநர் ராஜூ முருகன். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் குக்கூ. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நாயகன் மற்றும் நாயகி இருவரும் பார்வையற்றவர்களாக நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றனர். மேலும் படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அந்த வகையில் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர், ஜிப்சி, மார்டன் லவ் சென்னை மற்றும் ஜப்பான் ஆகியப் படங்கள் தொடர்ந்து கவனத்தை ஈர்த்தது. இதில் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் இறுதியாக வெளியான ஜப்பான் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் மை லார்ட்.

வெளியானது சசிகுமாரின் மை லார்ட் படத்தின் ட்ரெய்லர்:

அதன்படி இயக்குநர் ராஜூ முருகன் எழுதி இயக்கி உள்ள படம் மை லார்ட். இந்தப் படத்தில் நடிகர் சசிகுமார் நாயகனாக நடித்து உள்ள நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் சைத்ரா ஜே ஆச்சார், ஆஷா சரத், குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், கோபி நயினார், வசுமித்ரா என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இதில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருக்கும் சசிகுமார் இறந்துவிட்டதாக செய்தி வரும் நிலையில் அவர் உயிருடன் இருப்பதை எப்படி நிரூபிக்கிறார். இந்த அரசும் அதிகாரிகளும் அவரை எப்படி அழைக்களிக்கிறார்கள் என்பதே படத்தின் கதை என்பது ட்ரெய்லரைப் பார்க்கும் போது தெரிகிறது.

Also Read… இதுவரை தமிழ் பிக்பாஸில் கோப்பையை வென்றது யார் யார்? அதில் பெண் போட்டியாளர்கள் எத்தனைபேர் தெரியுமா?

நடிகர் சசிகுமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கண்டிஷன் ஃபாலோ பண்ணுங்கடா டயலாக் வைத்தது ஏன்… நடிகர் ஜீவா விளக்கம்