Jiiva: ஜாலியா இருந்த ஒருத்தன் படம் எப்போது ரிலீஸ் – ஹேப்பி நியூஸ் சொன்ன ஜீவா!
Jiiva About JIO Movie Release: தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜீவா. இவரின் நடிப்பில் சமீபத்தில் தலைவர் தம்பி தலைமையில் என்ற படமானது வெளியாகியிருந்த நிலையில், நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இவர், தனது புது படம் குறித்து சிறப்பான அப்டேட் ஒன்றை கூறியுள்ளார்.
கோலிவுட் சினிமாவில் பேமஸ் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருப்பவர் ஜீவா (Jiiva). இவர் சினிமாவில் ஆரம்பத்திலிருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம்தான் “தலைவர் தம்பி தலைமையில்” (Thalaivar Thambi Thalamaiyil). இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க, மலையாள பிரபல இயக்குநர் நிதிஷ் சகாதேவ் (Nithish Sahadev) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே மலையலத்தில் பேசில் ஜோசப்பின் பெலிமி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதை அடுத்ததாக தமிழில் இவர் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம்தான் தலைவர் தம்பி தலைமையில். இப்படம் 2026 ஜனவரி 15ம் தேதி முதல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இதற்கு சில நாட்களுக்கு முன் பராசக்தி படம் வெளியாகியிருந்த நிலையில், அந்த படத்தை ஒப்பிடும்போது இதற்கு மக்களிடையே சிறப்பான வரவேற்பு இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜீவா, தான் நடித்துவரும் புது படமான “ஜாலியா இருந்த ஒருத்தன்” (jolly aah iruntha oruthan) (JIO) படத்தின் ட்ரெய்லர் மற்றும் ரிலீஸ் அப்டேட் குறித்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: மீசையை முறுக்கு 2 படம் குறித்து முக்கிய அப்டேட் சொன்ன ஆதி – வைரலாகும் வீடியோ
ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் அப்டேட் குறித்து ஜீவா சொன்ன விஷயம் :
அந்த சந்திப்பில் பேசிய ஜீவா, “எனது அடுத்த திரைப்படம் ஜாலியா இருந்த ஒருத்தன். இதை SMS பட பேமஸ் இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கியிருக்காரு. இவர் ஓகே ஓகே, பாஸ் என்கிற பாஸ்கரன் என பல பேமஸ் படத்தை இயக்கியிருக்காரு. அவர் SMS படத்தின் மூலமாகத்தான் முதல் முதலில் சினிமாவில் இயக்குநராக நுழைந்தார். மேலும் கிட்டத்தட்ட 16 வருடத்திற்கு பின் நானும் அவரும் புது படத்தில் இணைந்திருக்கிறோம். கூடிய விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும்.
இதையும் படிங்க: சூர்யா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. மீண்டும் இணைகிறதா எதற்கும் துணிந்தவன் பட காம்போ?
மேலும் இந்த 2026ம் வருடத்தில் இந்த கோடைக்காலத்தில் இப்பாடத்தை ரிலீஸ் செய்யவதற்கு திட்டமிட்டுளோம். மேலும் ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் ரிலீஸிற்கு முன்பே, சிவா மனசுல சக்தி படத்தின் ரீ-ரிலீஸ் இருக்கும். மேலும் புதுசா ரீ-ரிலீஸ் ட்ரென்டிங் சூப்பராக அமைந்திருக்கிறது. அதனால் ஜாலியா இருந்த ஒருத்த படத்தின் ரிலீசிற்கு முன் SMS படத்தின் ரீ-ரிலீஸ் இருக்கும். அந்த படத்தின் பீல் JIO படத்திலும் இருக்கவேண்டும் என்ற நிலையில், அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக இப்படத்தின் ரீ-ரிலீஸ் இருக்கும்” என அதில் அவர் பேசியுள்ளார்.
ஜாலியா இருந்த ஒருத்தன் படம் குறித்து ஜீவா பேசிய வீடியோ பதிவு :
#Jiiva Recent
– My next film is #JolliyaIrunthaOruthan, directed by SMS fame #MRajesh, a blockbuster director.
– The trailer will be released soon, and the film is scheduled for a summer release this year.#TTTpic.twitter.com/canughf3Pf— Movie Tamil (@_MovieTamil) January 18, 2026
இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், இந்த 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.