சூர்யா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. மீண்டும் இணைகிறதா எதற்கும் துணிந்தவன் பட காம்போ?
Suriya 48th Movie Update: நடிகர் சூர்யாவின் நடிப்பில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரம்மாண்ட படங்கள் வெளியாகியுள்ளது. அந்த விதத்தில் இவர் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தோல்வியை சந்தித்த நிலையில், இந்த காம்போ மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்துவருபவர் சூர்யா (Suriya) . இவர் நடிகராக மட்டுமில்லாமல், தனக்கு பிடித்த கதைகளை தயாரித்தும் வருகிறார். அந்த விதத்தில் சூர்யாவின் நடிப்பில் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் ரெட்ரோ (Retro). கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. பல ஆண்டுகளுக்கு பின் சூர்யாவிற்கு சிறப்பான வெற்றி திரைப்படமாகவே இது அமைந்திருந்தது. இப்படத்தை அடுத்தாக இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (RJ.Balaji), வெங்கி அட்லூரி (Venky Atluri) மற்றும் ஜித்து மாதவன் (Jithu Madhavan) போன்ற இயக்குநர்களுடன் புது படங்களில் ஒப்பந்தமாகியிருந்தார். இந்த படங்கள் முழுக்க மிக பிரம்மாண்டமான கதைக்களத்தில் தயாராகியிருந்தது. அந்த வகையில் தற்போது இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகிவரும் சூர்யா47 படத்தில், சூர்யா நடித்துவருகிறார்.
இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து தனது 48வது படத்தில் பிரபல இயக்குநர் ஒருவருடன் இணையவுள்ளார் என கூறப்படுகிறது. அது வேறுயாருமில்லை இயக்குநர் பாண்டிராஜ் தான் (Pandiraj).




இதையும் படிங்க: ரீ ரிலீஸாகும் நடிகர் சூர்யாவின் சூப்பர்ஹிட் படம் மௌனம் பேசியதே… எப்போது தெரியுமா?
மீண்டும் இணைகிறதா எதற்கும் துணிந்தவன் பட காம்போ :
கடந்த 2022ம் ஆண்டில் சூர்யாவின் நடிப்பில் வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இதை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படமானது சூர்யாவிற்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருந்தார். இந்த படமானது சூர்யாவிற்கு பெரியதாக வரவேற்பை கொடுக்கவில்லை.
இதையும் படிங்க: காதலர் தினத்தில் மிருணாள் தாக்கூரை திருமணம் செய்யும் தனுஷ்? இணையத்தில் வைரலாகும் தகவல்
இந்த படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் சூர்யா 48 படத்திற்காக சூர்யா மற்றும் பாண்டிராஜ் காம்போ மீண்டும் இணையவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.
சூர்யா மற்றும் பாண்டிராஜ் புது படம் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு :
#Suriya48 — #Pandiraj Direction
— After #EtharkkumThunindhavan, #Suriya is going to act in a film again under the direction of Pandiraj. This film is produced by #ZhagaramStudios.
— Two films, #SURYA47 & SURYA 48, are being produced by Zhagaram Studios. pic.twitter.com/W6AcKnzxH3
— Movie Tamil (@_MovieTamil) January 17, 2026
மேலும் இந்த படத்தை சூர்யாவின் புது தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் நிறுவனம்தான் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலானது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. ஒருவேளை உண்மையானால் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சூர்யா தனது சூர்யா 47 படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்துவரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்த பிறகே அந்த புது படத்தில் கூறப்படுகிறது.