Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜிவி பிரகாஷ் உடன் பணியாற்ற பல நாட்களாக காத்திருந்தேன் – நடிகர் சூரி

Actor Soori Abour GV Prakash: தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூரி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் சமீபத்தில் இவர் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜிவி பிரகாஷ் உடன் பணியாற்ற பல நாட்களாக காத்திருந்தேன் – நடிகர் சூரி
நடிகர் சூரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Jan 2026 19:59 PM IST

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் பெயரிடப்படாத கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் சூரி பின்நாட்களில் படங்களில் காமெடி நடிகராக நடிக்கத் தொடங்கினார். அதன்படி இவர் காமெடி கதாப்பாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வந்தாலும் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார் நடிகர் சூரி. அதன்படி இந்தப் படத்தில் ஒல்லியான தேகம் கொண்ட நடிகர் சூரி சாப்பாடு என்று வந்தால் எவ்வளவாக இருந்தாலும் சாப்பிடும் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் பராட்டோ என்பது சூரிக்கு மிகவும் பிடித்த உணவாக உள்ளது. அதன் காரணமாக அவர் அதிக அளவில் பரோட்டா சாப்பிடும் காட்சிகள் இந்தப் படத்தில் இடம் பெற்று ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தொடர்ந்து காமெடி நடிகரக நடிக்கத் தொடங்கினார். அதிலும் குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகர் சூரி நடித்தப் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து காமெடி நடிகராக வலம் வரும் நடிகர் சூரி தற்போது கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் சூரி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஜிவி பிரகாஷ் உடன் பணியாற்ற பல நாட்களாக காத்திருந்தேன்:

நான் ஜி.வி. பிரகாஷுடன் நீண்ட காலமாகப் பணியாற்ற விரும்பினேன். ‘மாமன்’ படத்திற்காக அவரை ஒப்பந்தம் செய்ய நான் கடுமையாக முயற்சி செய்தேன், ஆனால் அது கைகூடவில்லை. காட்சிக்கு கச்சிதமாகப் பொருந்தக்கூடிய பின்னணி இசையின் மூலம் பார்வையாளர்களைக் கட்டிப்போடும் ஒரு அற்புதமான திறமை ஜி.வி. பிரகாஷிடம் உள்ளது.

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்தால், நான் தயக்கமின்றி எனது கால்ஷீட்டைக் கொடுப்பேன் என்று ‘மாமன்’ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரிடம் கூட நான் கூறினேன். துரதிர்ஷ்டவசமாக, அது நடக்கவில்லை. ‘மண்டாடி’ படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடமும் நான் இதையே சொன்னேன். படத்தின் சில காட்சிகளைப் பார்த்த உடனேயே, அவர் பின்னணி இசையமைக்கத் தொடங்கிவிட்டார். அதன் முடிவு மிகச் சிறப்பாக வந்துள்ளது. உண்மையில், நாங்கள் அனைவரும் ஒரு ஜி.வி. பிரகாஷ் படத்தில் நடித்திருக்கிறோம் என்று பெருமையுடன் சொல்லலாம்.

Also Read… யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்தது விஜயின் தளபதி கச்சேரி பாடலின் லிரிக்கள் வீடியோ

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… கண்ணீருடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய முன்னாள் போட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ