Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கண்ணீருடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய முன்னாள் போட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இந்த நிகழ்ச்சியின் ஃபினாலே நாளை பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் உள்ள முன்னாள் போட்டியாளர்கள் தற்போது வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர்.

கண்ணீருடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய முன்னாள் போட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Jan 2026 17:08 PM IST

வெளி நாடுகளில் பிக்பிரதர் என்ற பெயரில் பிரபலமான நிகழ்ச்சி இந்தியாவில் பிக்பாஸ் என்ற பெயரில் ஒளிபரப்பாகத் தொடங்கியது. அதன்படி இந்திய சினிமாவில் முதன்முதலாக இந்த நிகழ்ச்சி இந்தி சினிமாவில் தான் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறத் தொடங்கியது. அதற்கு காரணம் பலதரப்பட்ட எண்ணங்களைக் கொண்ட சில நபர்களை ஒரே வீட்டிற்குள் 100 நாட்கள் தங்கவைக்கப்படுவார்கள். இவர்களுக்கு வெளியுலக தொடர்பு எதுவும் இருக்காது. தொடர்ந்து 100 நாட்களில் இவர்கள் என்ன எல்லாம் செய்கிறார்கள் என்பதை வீடியோ எடுத்து ஒளிபரப்புவார்கள். அது ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தி சினிமாவில் பல சீசன்களாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து தென்னிந்திய சினிமாவிலும் இந்த நிகழ்ச்சி தொடங்கி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு பிக்பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் சீசனே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டு தொடர்ந்து ஒளிபரப்பாகி இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாக சென்ற நிலையில் நாளை முடிய உள்ளது குறிப்பிடத்தக்கது.

கண்ணீருடன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள்:

இந்த நிலையில் இந்த போட்டியில் திவ்யா, அரோரா, சபரி மற்றும் விக்ரம் ஆகியோர் ஃபைனலிஸ்ட்சுகளாக உள்ள நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக வீட்டில் இருந்து முன்னதாக வெளியேறிய போட்டியாளர்கள் செலிபிரேஷனுக்காக அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் நாளை ஃபினாலே மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து முன்னாள் போட்டியாளர்கள் கண்ணீருடன் வெளியேறி உள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… நகைச்சுவை படங்களில் நடிக்காமல் இருப்பதற்கு காரணம் இதுதான் – சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு;

Also Read… ரீ ரிலீஸாகும் நடிகர் சூர்யாவின் சூப்பர்ஹிட் படம் மௌனம் பேசியதே… எப்போது தெரியுமா?