காமெடி நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் நியாபகம் இருக்கா? அவரது மகன் பற்றி தெரியுமா?
Omakuchi Narasimhan's Son : தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் காமெடி வேடங்களில் நடித்தவர் ஓமக்குச்சி நரசிம்மன். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 14 மொழிகளில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவரது மகன் குறித்த சுவாரசியத் தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்படங்களில் நடிக்கும் பெரிய நட்சத்திரங்களை மட்டும் ரசிகர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். ஆனால் சிறு சிறு வேடங்களில் நடித்த நடிகர்களை அவர்கள் எளிதில் மறந்து விடுகிறார்கள். அப்படி ஒருவர் தான் ஓமக்குச்சி நரசிம்மன். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 14 மொழி திரைப்படங்களில் நடித்து சத்தமில்லாத சாதனையை படைத்திருக்கிறார். ஓமக்குச்சி நரசிம்மன் என்றதும் ரசிகர்களிடையே சட்டென நினைவிக்கு வருவது சூரியன் படத்தில் இவரைப் பார்த்து கவுண்டமணி சொல்வாரே இந்த கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை என்ற அந்த வசனம் தான். ஆனால் அதனையும் தாண்டி இவர் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஓமக்குச்சி நரசிம்மனின் பங்களிப்பு
இவரது ஒல்லியான தோற்றத்தை வைத்தே கவுண்டமணி அவரை கலாய்க்கும் காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கின்றன. அந்த காட்சிகள் இன்றளவும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன. கடந்த 1953 ஆம் ஆண்டு வெளியான ஔவையார் என்ற படத்தின் மூலம் அறிமுகமான நரசிம்மன் தற்போதைய தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில் எல்ஐசி வேலை செய்துகொண்டே மேடை நாடகங்களில் நடித்து வந்திருக்கிறார். அந்த காலத்திலேயே பட்டப்படிப்பு படித்திருக்கிறார். பின்னர் சிறிய இடைவேளைக்கு பிறகு விசுவின் கௌரி கல்யாணம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிக்க : மா இண்டி பங்காரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹோலி கொண்டாடிய சமந்தா – வைரலாகும் வீடியோ
ஓமக்குச்சி நரசிம்மனின் மகனைப் பற்றிய வீடியோ
View this post on Instagram
மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 14 மொழி படங்களில் நடித்துள்ளார். குறிப்பா இவர் இந்தியன் சம்மர் என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சூரியன் தவிர சம்சாரம் அது மின்சாரம் படத்தில் புரோக்கர் வேடம், இந்தியன் படத்தில் லாரி டிரைவர் வேடம். ஜெண்டில்மேன் படத்தில் உதவியாளர் வேடம், பாண்டியராஜனின் ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர் வேடம் என இவரது பல வேடங்கள் மறக்க முடியாதவை. கடைசியாக சுந்தர்.சியின் தலைநகரம் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஓமக்குச்சி நரசிம்மன் சிகிச்சை பலனின்றி கடந்த 2009 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
இதையும் படிக்க : விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் கதையை மிகவும் சிறப்பாக எழுதியுள்ளார் வெங்கி அட்லூரி – ராதிகா சரத்குமார்
ஓமக்குச்சி நரசிம்மனின் மகன் என்ன செய்கிறார்?
ஓமக்குச்சி நரசிம்மனுக்கு திருமணமாகி 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். அவரது மகன் காமேஸ்வரன் தனது தந்தையைத் தொடர்ந்து சினிமாவில் நடிகராக அறிமுகமாகாமல் வித்தியாசமான தொழிலை தேர்ந்தெடுத்துள்ளார். ஓமக்குச்சி நரசிம்மனின் மகன் காமேஸ்வரன் பாபாவின் பக்தராக துறவு வாழ்க்கை மேற்கொண்டுள்ளார். சித்தர் சிவயோகி ஓம்காமேஸ்வரா என்ற பெயரில் ஆன்மீக சேவையாற்றி வருகிறார்.



