திரையரங்குகளில் வெற்றிநடைப் போடும் சிறை படம்… கொண்டாடும் படக்குழுவினர்
25 Days Of Sirai Movie: தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் சிறை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 25 நாட்களை கடந்துள்ளதைப் படக்குழு தற்போது கொண்டாடி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக சின்ன சின்ன பட்ஜெட்டில் உருவாகும் சிறந்த கதைகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. முன்பு எல்லாம் ஒரு படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறவேண்டும் என்றால் அதில் உச்ச நட்சத்திரம் நடித்து இருக்க வேண்டும், மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் படம் உருவாகி இருக்க வேண்டும், பாடல்கள் இத்தனை இருக்க வேண்டும் அதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள், இசையமைப்பாளர் யார் இருக்க வேண்டும் என்று பல வரையரைகள் இருந்தது. ஆனால் தற்போது சினிமாவை ரசிகர்கள் பார்க்கும் விதம் முற்றிலுமாக மாறியுள்ளது. அதன்படி நல்ல கதையாக இருந்தால் யார் நடித்து இருந்தாலும் அந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அதனை அவர்கள் பாராட்டவும் தயங்கியது இல்லை.
இப்படி தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் சிறப்பான கதையைக் கொண்டாடும் பழக்கத்தை ரசிகர்கள் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் சிறை. இந்தப் படத்தை இயக்குநர் சுரேஷ் ராஜ்குமாரி இயக்கி இருந்தார். மேலும் படத்தின் திரைக்கதையை இயக்குநர்கள் சுரேஷ் ராஜ்குமார் மற்றும் தமிழ் இருவரும் இணைந்து எழுதி இருந்தனர்.




திரையரங்குகளில் வெற்றிநடைப் போடும் சிறை படம்:
உண்மைக் கதையை மையமாக வைத்து உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் விக்ரம் பிரபு, எல்.கே. அக்சை குமார், ஆனந்தா தம்பிராஜா, அனிஸ்மா அணில்குமார், பி. எல். தேனப்பன் ஆகியோரின் நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் சிறை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 25 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளதைப் படக்குழு தற்போது போஸ்டர் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.
Also Read… கண்ணீருடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய முன்னாள் போட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ
சிறை படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
25 வெற்றிநாட்கள் 🎉
One intense journey. Endless applause 👏🏽#25DaysOfSiraiBook your tickets: https://t.co/7c1xDiBBPn@7screenstudio #Sirai
Starring @iamVikramPrabhu @lk_akshaykumar @iamanishma @anandasayani #SureshRajakumari @madheshmanickam @justin_tunes @philoedit… pic.twitter.com/bh4e1orfxJ— Seven Screen Studio (@7screenstudio) January 18, 2026
Also Read… Theri Vs Mankatha: தல – தளபதி ரீ-ரிலீஸ் திருவிழா…. ரீ ரிலீஸில் மங்காத்தா படத்துடன் மோதும் தெறி!