47-வது படத்தில் சூர்யாவின் கதாப்பாத்திரம் இப்படிதான் இருக்குமா? வைரலாகும் தகவல்
Suriya 47 Movie Update: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகிவரும் 47-வது படத்தின் கதை என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ளவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தற்போது அடுத்தடுத்து 3 படங்கள் விறுவிறுப்பாக உருவாகி வருகின்றது. அதில் தமிழ் சினிமா இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி எழுதி இயக்கி உள்ள கருப்பு படம், தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படம் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47 ஆகியப் படங்கள் விறுவிறுப்பாக தயாராகி வருகின்றது. மேலும் இந்தப் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
மேலும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள கருப்பு படம் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள 46-வது படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து சூர்யாவின் 47-வது படம் இந்த ஆண்டில் இறுதியில் அல்லது அடுத்த 2027-ம் ஆண்டு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.




சூர்யா 47-வது படத்தில் இதுதான் அவரது கதாப்பாத்திரமா?
இந்த நிலையில் நடிகர் சூர்யா இந்த 47-வது படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்று முன்னதாகவே புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து ரசிகர்களிடையே வைரலானது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவின் கதாப்பாத்திரம் நெகட்டிவ் ஷேடில் இருக்கும் என்று தகவல் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதுவரை நடிகர் சூர்யா முழு நீல நெகட்ட்வில் ரோலில் நடித்தது இல்லை என்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Also Read… Sudha Kongara: ஜனநாயகனுக்கு நடந்தது எந்தப் படத்துக்கும் நடக்கக் கூடாது – சுதா கொங்கரா பேச்சு!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
Looks Like #Suriya is gonna Sport a Singam Moustache for #Suriya47 ..😮💥 Suriya as a Badass Fun Cop..🤩 Looking Forward.. 🤝 pic.twitter.com/CSmdCCTEMS
— Laxmi Kanth (@iammoviebuff007) January 19, 2026
Also Read… அதிரடி படத்தில் டொவினோ தாமஸின் கேரக்டர் இதுதான்… வெளியானது போஸ்டர்