Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இரண்டாவது குழந்தைக்கு வெய்டிங்… மீண்டும் கர்ப்பமாக இருக்கும் அட்லீ – ப்ரியா தம்பதி!

Atlee and wife Priya announce their second pregnancy: பான் இந்திய அளவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அட்லி. இவருக்கும் இவரது மனைவி நடிகை ப்ரியாவிற்கும் இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளது குறித்து அவர்கள் புகைப்படங்களுடன்அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இரண்டாவது குழந்தைக்கு வெய்டிங்… மீண்டும் கர்ப்பமாக இருக்கும் அட்லீ – ப்ரியா தம்பதி!
அட்லீ - ப்ரியா Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Jan 2026 14:42 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வந்த இயக்குநர் அட்லி தற்போது பான் இந்திய அளவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அட்லி அதனைத் தொடர்ந்து ராஜா ராணி என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இவரது இயக்கத்தில் வெளியான முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது படத்திலேயே தளபதி விஜய் உடன் கூட்டணி வைத்தார். தொடர்ந்து நடிகர் விஜய் உடன் அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கினார். அதன்படி இவர்களின் கூட்டணியில் வெளியான தெரி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்றுமே சூப்பர் டூப்பட் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பாலிவுட் சென்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் படம் வசூலில் பட்டையைக் கிளப்பியது மட்டும் இன்றி தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் அட்லி தற்போது நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து படம் இயக்கி வருகிறார். சயின்ஸ் ஃபிக்‌ஷன் பாணியில் உருவாகி வரும் இந்தப் படம் மிகவும் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்திய சினிமா ரசிகர்களுக்கு இந்தப் படம் புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும் என்று சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து சினிமா சார்ந்த செய்திகள் இயக்குநர் அட்லி குறித்து வெளியாகி வரும் நிலையில் அவரது சொந்த வாழ்க்கை தொடர்பான தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது.

மீண்டும் கர்ப்பமாக இருக்கும் அட்லீ – ப்ரியா தம்பதி:

தமிழ் சினிமாவில் செலிபிரிட்டி ஜோடியாக வலம் வருபவர்கள் இயக்குநர் அட்லி மற்றும் நடிகை ப்ரியா. இவர்கள் இருவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 09-ம் தேதி திருமணம் நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் இயக்குநர் அட்லி தற்போது வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஒன்றாக வெக்கேஷன் சென்ற நடிகைகள் நயன்தாரா – த்ரிஷா… இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படங்கள்

இயக்குநர் அட்லி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஒரு தீர்ப்பெழுதுற அதிகாரத்தை அந்த பரபிரம்மா ஒரு கடைக்கோடி மனுஷன்கிட்ட கொடுத்துருக்கு – வெளியானது சசிகுமாரின் மை லார்ட் படத்தின் ட்ரெய்லர்!