Divya Ganesh: பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியின் டைட்டிலை தட்டிச்சென்ற திவ்யா கணேஷ்.. ஹேப்பியில் ரசிகர்கள்!
Bigg Boss Tamil 9 Title winner: தமிழில் கடந்த 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கிய நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 9 தமிழ். இந்நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று 2026 ஜனவரி 18ல் நடைபெற்றிருந்த நிலையில், இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தையும், ரூ 50 லட்சம் காசோலையையும் சின்னத்திரை நடிகை திவ்யா கணேஷ் வென்றுள்ளார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்துவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் (Bigg Boss). இவர் கடந்த பிக் பாஸ் சீசன் 8 முதல் தொகுப்பாளராக தொகுத்து வருகிறார். அந்த வகையில் 2025 -2026ல் நடைபெற்றுவந்த பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியையும் இவரே தொகுத்துவழங்கினார். இந்த பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் கடந்த 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இன்று 2026 ஜனவரி 18ம் தேதியோடு நிறைவடைந்துள்ளது. இந்த சீசனானது மொத்தமாக 20 போட்டியாளர்களுடன் சிறப்பாக தொடங்கிய நிலையில், முதல் 2 வாரத்தில் 3 போட்டியளார்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். இந்நிலையில் இதன் 3வது வாரத்தின் வைல்ட் கார்ட் என்ட்ரியாக திவ்யா கணேஷ் (Divya Ganesh) , அமீத், சாண்டரா மற்றும் அவரின் கணவர் பிரஜின் உட்பட 4 போட்டியாளர்கள் நுழைந்தனர். இதன் பின் மொத்தம் 21 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சியானது நடைபெற்றுவந்த நிலையில், அதிகமான சண்டைகள், நாளுக்கு நாள் பரபரப்பு என சென்றது.
அதில் கானா வினோத் (Ganaa Vinoth) இந்த சீசன் 9ன் டைட்டிலை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பணப்பெட்டியை எடுத்து வெளியேறிவிட்டார். இந்நிலையில் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று 2026 ஜனவரி 18ம் தேதியில் நடைபெற்றிருந்த நிலையில், அதில் திவ்யா கணேஷ் பிக் பாஸ் சீசன் 9 வெற்றிபெற்று டைட்டில் வின்னராகியுள்ளார். மேலும் முதல் ரன்னர்அப்பாக சபரி மற்றும் 2வது ரன்னர்அப்பாக விக்கல்ஸ் விக்ரம் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ல் என்னெல்லாம் நடந்தது… ரீகேப் இதோ




பிக் பாஸ் சீசன் 9ன் டைட்டிலை தட்டிச்சென்ற திவ்யா கணேஷ் குறித்த பதிவு :
பிக் பாஸ் சீசன் 9ல் திவ்யா கணேஷ் பெற்றுச்சென்ற பணம் எவ்வளவு :
இந்த பிக் பாஸ் சீசன் 9ன் தமிழில் திவ்யா கணேஷ் வைல்ட் கார்ட் என்டரியாக நுழைந்திருந்தார். இவர் விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் நடிகைகளில் ஒருவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. பாக்கியலட்சுமி என்ற சீரியலில் ஜெனி என்ற வேடத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர். இவர் சினிமாவிலும் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் சாதாரணமான கிராமத்தில் இருந்து நடிகையாக சீரியலில் நடித்துவந்தார். இந்நிலையில் இந்த பிக் பாஸ் சீசன் 9 தமிழில் மிகவும் துணிச்சலான பெண்ணாக இவர் அறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இதுவரை தமிழ் பிக்பாஸில் கோப்பையை வென்றது யார் யார்? அதில் பெண் போட்டியாளர்கள் எத்தனைபேர் தெரியுமா?
இன்று 2026 ஜனவரி 18ல் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலேவில், விஜய் சேதுபதியுடன் இறுதிக்கட்ட மேடையில் சபரி மற்றும் திவ்யா கணேஷ் இடம்பெற்றிருந்தனர். அதில் விஜய் சேதுபதி திவ்யா கணேஷின் கையை உயர்த்தி அவரையே பிக் பாஸ் சீசன் 9ன் டைட்டில் வின்னராக அறிவித்தார். இந்நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற திவ்யா கணேஷ் ரூ 50 லட்சம் பரிசை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.