நெருங்கி வரும் கோடை விடுமுறை.. ஊட்டி மலை ரயில் குறித்து குளு குளு அறிவிப்பு.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
Mettupalayam Ooty Mountain Train: தமிழகத்தில் நெருங்கி வரும் கோடை காலத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கும் பொதுமக்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்பட்டு வரும் மலை ரயிலில் பயணம் செய்வதற்கு மிகுந்த முன்னுரிமை அளிப்பார்கள். ஏனென்றால், இந்த மலை ரயிலானது மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து அருவிகள், காடுகள், பாறையை குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ள குகைகளின் வழியாக சென்று வனவிலங்குகளுக்கு மத்தியில் இந்த மலை ரயில் ஊட்டியை சென்றடையும். இதனால், இந்த மலை ரயில் பயணத்துக்கு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. தற்போது, இந்த மலை ரயிலானது மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினந்தோறும் காலை 7:10 மணிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மலை ரயிலில் போதிய இருக்கை வசதிகள் இல்லாததால் கூடுதல் மலை ரயில்களை இயக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் தொடர் கோரிக்கையை எழுப்பி வந்தனர்.
மேட்டுப்பாளையம்-ஊட்டி சிறப்பு மலை ரயில்
இந்த நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு கோடை விடுமுறை விடப்பட உள்ளது. இதனால், தமிழகத்தில் ஏப்ரல் பாதிக்கு மேல் மே மாதம் வரை கோடை விடுமுறை அமலில் இருக்கும். இந்த விடுமுறை காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவு கோவை மற்றும் ஊட்டிக்கு சுற்றுலாவுக்காக படையெடுப்பார்கள். இவ்வாறு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை சிறப்பு மலை ரயில் இயக்கப்பட தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க: கொளுத்தும் வெயிலுக்கு குளிர்ச்சியான சுற்றுலா தலம்… தென்தமிழகத்தின் சொர்க்கம்… பரபரப்பான வாழ்வில் இருந்து இளைப்பாற இங்க போங்க!




ஊட்டி சிறப்பு மலை ரயில் எப்போது இயக்கம்
அதன்படி, வருகிற மார்ச் 27-ஆம் தேதி முதல் ஜூலை 5- ஆம் தேதி வரை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 9: 10 மணிக்கு புறப்பட்டு அன்றும் அதிகம் 2:25 மணிக்கு ஊட்டி ரயில் நிலையத்தை சென்றடையும். இதே போல, கேத்தியில் இருந்து ஒட்டிக்கும், குன்னூரில் இருந்து ஒட்டிக்கும் மலை ரயில் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோடை காலங்களில் ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலை ரயிலில் எந்தவித சிரமமும் இன்றி பயணம் செய்யலாம்.
ஊட்டி மலை ரயில் கட்டணம் எவ்வளவு
இவ்வளவு சிறப்பு வாய்ந்த மலை ரயிலுக்கான டிக்கெட் கட்டணம் அண்மையில் உயர்த்தப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த பிப்ரவரி 21- ஆம் தேதி முதல் சாதாரண கட்டணத்தில் 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வழித்தடத்தில் முதல் வகுப்பு கட்டணம் ரூ. 630- ஆகவும், 2- ஆம் வகுப்பு கட்டணம் ரூ.310- ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வு சுற்றுலா பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கோவாவுக்கு சிறப்பு சுற்றுலா ரயில்… ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு… 7 நாள்கள் செம என்ஜாய்மெண்ட்!