இந்திய திரைப்பட விழா சிங்கப்பூர் 2026-ல் தேர்வானது சூரரைப் போற்று படம்!
Indian Film Festival Singapore 2026: சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய திரைப்பட விழா சிங்கப்பூர் என்ற பெயரில் இந்தியப் படங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இருந்து சூரரைப் போற்று படத்தை நிகழ்ச்சி குழு தேர்வு செய்துள்ளது.
உலகம் முழுவதும் சினிமா துறையில் ஒவ்வொரு ஆண்டும் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. அதன்படி இந்தியவிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் வருடத்திற்கு ஒருமுறை திரைப்பட விழாவை நடத்தி வருகின்றனர். இந்த திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் வெளியான சிறந்த படங்களை தேர்வு செய்து குறிப்பிட்ட நாட்கள் தொடர்ந்து ஒளிபரப்புவதே ஆகும். இதில் அந்த மாநில மொழியில் உருவான படங்கள் மட்டும் இன்றி பல மொழிகளில் உருவான சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் சிங்கப்பூரில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா சிங்கப்பூர் 2026 வருகின்ற 23-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு முதல் 8-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த திரையிடலில் ஒளிபரப்பாக உள்ள படங்களின் பட்டியல் வெளியாகி வைரலாகி வருகின்றது.
அதன்படி அந்தப் பட்டியலில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் சூரரைப் போற்று. கொரோனா காலத்தில் இந்தப் படம் உருவானதால் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகமல் ஓடிடியில் வெளியானது. ஆனால் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் வசூலி மாபெரும் சாதனையைப் படைத்து இருக்கும் என்று ரசிகர்களும் சினிமா வட்டாரத்தில் உள்ளவர்களும் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.




இந்திய திரைப்பட விழா சிங்கப்பூர் 2026-ல் தேர்வானது சூரரைப் போற்று:
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் பயோ பிக்காக உருவான இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் சாதாரண ஏழை மக்களும் ஏரோப்ளைனில் பறக்க முடியும் என்ற கனவை தூண்டியது மட்டும் இன்றி அதனை சாதித்துக்காட்டவும் செய்து இருப்பார் நடிகர் சூர்யா. ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் இந்திய திரைப்பட விழா சிங்கப்பூர் 2026-ல் வருகின்ற 22-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது முடிவடையும்? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
• Breaking – #SooraraiPottru 💥 Has Been Selected For Indian Film Festival 2026, Singapore (Among 21 films across 8 languages.
The Film Will Be Screened On 22nd FEB, 3:30 PM As Part Of The Fest | @Suriya_offl @rajsekarpandian @2D_ENTPVTLTD @gvprakash @Sudha_Kongara pic.twitter.com/Wv5TGQv4eF
— Hari™ (@Hari_Socialist) January 20, 2026