Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரூட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

Director AR Murugadoss: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ரூட் படத்தின் இரண்டாவது பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது.

ரூட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்
ரூட் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Jan 2026 16:30 PM IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரது இயக்கத்தில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் மதராஸி. இந்தப் படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் படம் வசூலில் 100 கோடிகளை கடந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எந்தப் படத்தை யாருடைய படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் மற்ற நடிகர்கள் அல்லது இயக்குநர்களின் படங்களின் அப்டேட்டை பிரபலங்கள் தொடர்ந்து தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாகவே கொண்டுள்ளனர்.

அதன்படி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ரூட் படத்தின் இரண்டாவது பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளார். முன்னதால ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டு இருந்தார். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது இந்த இரண்டாவது போஸ்டரும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ரூட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்:

இயக்குநர் சூர்யபிரதாப் எழுதி இயக்கி உள்ள படம் ரூட். இந்தப் படத்தின் மூலமாக இயக்குநர் சூர்யபிரதாப் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ள நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் அபர்சக்தி குரானா, பவ்யா திரிகா, ஒய்.ஜி. மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் இந்த 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… 2026-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள்… நடிகர்கள் மம்முட்டி – மாதவனுக்கு அறிவிக்கப்பட்ட விருது

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நிஜ காதலர்களுக்கு என்ன ஆனது ? சிறை பட கதாசிரியர் தமிழ் சொன்ன தகவல்