Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2026-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள்… நடிகர்கள் மம்முட்டி – மாதவனுக்கு அறிவிக்கப்பட்ட விருது

Padma Awards for the 2026th Year: இந்தியா முழுவதும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு அரசு விருது வழங்கி தொடர்ந்து கௌரவித்து வருகின்றது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை தற்போது அரசு அறிவித்துள்ளது மக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

2026-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள்… நடிகர்கள் மம்முட்டி – மாதவனுக்கு அறிவிக்கப்பட்ட விருது
நடிகர்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Jan 2026 21:10 PM IST

மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருது வழங்கப்படுவது போல இந்தியா முழுவதும் அனைத்து துறையிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருது அறிவிக்கப்பட்டு பின்பு வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டிற்கான பத்ம விருது பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இந்த பத்ம விருதுகளில் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ என மொத்தம் மூன்று பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகின்றது. மத்திய அரசு வழங்கும் தேசிய விருதை இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் வழங்குவது போல இந்த பத்ம விருதுகளையும் பெறுபவர்கள் இந்திய நாட்டின் குரியரசுத் தலைவர் கைகளிலேயே பெறுவார்கள். இந்த நிலையில் இன்று 2026-ம் ஆண்டிற்கான பத்ம விருது பட்டியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ என மொத்தம் மூன்று பிரிவுகளிலும் மொத்தம் 131 பேருக்கு பத்ம விருதுகள் வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளின் பட்டியளில் நடிகர்கள் மம்முட்டி மற்றும் மாதவனின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. இவர்கள் மட்டும் இன்றி மற்ற மொழி நடிகர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மம்முட்டி மற்றும் மாதவனுக்கு பத்ம விருது… வாழ்த்தும் பிரபலங்கள்:

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் மம்முட்டிக்கும் பிரபல நடிகர் மாதவனுக்கும் இன்று பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2026-ம் ஆண்டிற்கான பத்ம விருது பட்டியளில் நடிகர் மம்முட்டிக்கு பத்ம பூஷண் விருதும் நடிகர் மாதவனுக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உட்பட பலரும் அவர்களுக்கு தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Also Read… அல்லூ அர்ஜூன் படம் எப்படி இருக்கும்… இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்

மம்முட்டிக்கு கமல் ஹாசன் வெளியிட்ட வாழ்த்துப் பதிவு:

Also Read… பேட்ரியாட் படத்திலிருந்து வெளியானது நயன்தாராவின் போஸ்டர்!