சினிமாவில் தளபதி விஜயின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்
AR Murugadoss talks about Vijay: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகுவது குறித்தும் அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தளபதி விஜய். இவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மட்டும் மொத்தம் 3 படங்களில் நடித்துள்ளார். இவர்களின் கூட்டணியில் வெளியான துப்பாக்கி, கத்தி மற்றும் சர்க்கார் ஆகிய மூன்று படங்களுமே திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இந்தப் படங்கள் மட்டும் இன்றி படங்களில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விஜய் தனது நடிப்பில் தற்போது 69-வது படமாக உறுவாகியுள்ள ஜன நாயகன் தான் இறுதிப் படம் என்றும் இனி படங்களில் நடிக்கப் போவதில்லை தீவிர அரசியலில் களம் இறங்க உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். இது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது போல பிரலங்களிடையேயும் தொடர்ந்து வருத்தத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முன்னதாக நடிகர் விஜய் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நடிகர் விஜய் படங்களில் நடிக்கும் போது எப்படி நடந்துகொள்வார் என்று பேசியிருந்தார். தொடர்ந்து அவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகினாலும் அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.




சினிமாவில் தளபதி விஜயின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது:
நான் மூன்று படங்கள் செய்திருக்கிறேன், அந்த மூன்று படங்களுமே எனக்கு மிகவும் மறக்க முடியாதவை. அவருக்காக நான் என்னென்ன வசனங்களையும் காட்சிகளையும் கற்பனை செய்தேனோ, அவற்றை விஜய் சார் எப்போதும் ஒரு படி மேலே சென்று வெளிப்படுத்தினார். காகிதத்தில் இருந்து திரைக்கு வரும்போது, அவர் எல்லாவற்றையும் மெருகேற்றினார். விஜய் சார் சினிமாவை விட்டு விலகுவது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஒரு உதவி இயக்குநராக இருந்து, அவரை இயக்கும் அளவுக்கு நான் வளர்ந்தேன். திடீரென்று ‘ஜன நாயகன்’ அவரது கடைசிப் படமாக இருப்பது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சினிமாவில் அவரது இடத்தை யாராலும் நிரப்பவோ அல்லது ஈடுசெய்யவோ முடியாது. அவர் விலகுவது குறித்து நான் கவலைப்படுகிறேன் என்று தெரிவித்து இருந்தார்.
Also Read… பாரதிராஜாவுக்கு என்ன பிரச்னை? உடல்நிலை எப்படி இருக்கு? மருத்துவனை வெளியிட்ட அறிக்கை
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
.@ARMurugadoss – No One Can Replace Thalapathy Vijay in Cinema! 🔥
⁰I have done 3 films & all 3 are very memorable to me. Whatever dialogues or scenes I imagined for him, Vijay sir always presented them one step ahead. From paper to screen, he always enhanced everything. 💥🔥… pic.twitter.com/DLvKAgX1OT— KARTHIK DP (@dp_karthik) January 4, 2026
Also Read… பிக்பாஸில் விக்ரம் நல்லா கொளுத்தி போடுவார்… வியானா கருத்தால் கண்கலங்கிய விக்ரம்