தனது 367-வது படத்தின் அறிவிப்பை வெளியிட்ட நடிகர் மோகன்லால் – வைரலாகும் பதிவு
Actor Mohanlal 367 Movie Update: மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் இதுவரை வெளியான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அவரது 367-வது படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.
மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மோகன்லா. 65 வயதைக் கடந்தும் தொடர்ந்து இளம் நடிகர்களுக்கு போட்டியாக நடித்து வருகிறார் நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் மோகன்லால் நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்தப் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்படி நடிகர் மோகன்லால் நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து மலையாளம் மற்றும் தெலுங்கு என 6 படங்கள் திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதில் இரண்டு படத்தில் கேமியோ ரோலில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டும் நடிகர் மோகன்லால் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. அதன்படி நடிகர் மோகன்லால் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டு த்ரிஷ்யம் 3 மற்றும் பாட்ரியாட் ஆகிய படங்கள் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இதனைத் தொடர்ந்து தனது 366-வது படத்தில் நடிகர் மோகன்லால் பிசியாக நடித்து வரும் நிலையில் தற்போது 367-வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.




தனது 367-வது படத்தின் அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால்:
அதன்படி மோகன்லால் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது, மிகுந்த மகிழ்ச்சியுடன், எனது அடுத்த திட்டமான L367-ஐ அறிவிக்கிறேன். ஸ்ரீ கோகுலம் மூவிஸ் பேனரின் கீழ் திரு. கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இந்த அற்புதமான திட்டத்தில், இயக்குநர் விஷ்ணு மோகனுடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த புதிய அத்தியாயத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இந்த அழகான பயணத்தை நாம் ஒன்றாகத் தொடங்கும் வேளையில், உங்கள் அனைவரின் அன்பையும், ஆசீர்வாதங்களையும், நல்வாழ்த்துக்களையும் வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
With immense joy, I announce my next project, #L367. I am truly delighted to collaborate with director Vishnu Mohan on this exciting venture, produced by Shri Gokulam Gopalan under the banner of Sree Gokulam Movies. Looking forward to this new chapter and seeking all your love,… pic.twitter.com/oCR7ZjKFqI
— Mohanlal (@Mohanlal) January 26, 2026
Also Read… மம்முட்டி – மோகன்லாலின் பேட்ரியாட் படத்தின் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் அட்லி